கோலி இல்லை.. 2 இந்திய வீரர்களுக்கு இடம்.. ஹைடனின் ஆல் டைம் ODI உலக கோப்பை லெவன்

0
2972

ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் நட்சத்திர ஆட்டக்காரரான மேத்யூ ஹைடன் தனது முழு நேர ஒரு நாள் உலகக் கோப்பை அணியை தேர்வு செய்து இருக்கிறார். அதில் இந்தியாவின் இரண்டு ஜாம்பவான் வீரர்கள் இருக்கின்றனர்.

ஆனால் குறிப்பிடத்தக்க விஷயமாக விராட் கோலியின் பெயர் அதில் இடம்பெறாதது ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

- Advertisement -

சர்வதேச கிரிக்கெட்டை பொருத்தவரை 2008ஆம் ஆண்டு அடியெடுத்து வைத்த விராட் கோலி அதற்குப் பிறகு கிரிக்கெட் உலகின் முடிசூடா மன்னனாக விளங்குகிறார். டி20 கிரிக்கெட்டை காட்டிலும் டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டிகளில் விராட் கோலி மிகச் சிறந்த ரெக்கார்டுகளை வைத்திருக்கிறார். அதிலும் ஒரு நாள் தொடரில் விராட் கோலி சச்சினுக்கு அடுத்த இடத்தில் எண்ணற்ற சாதனைகளை படைத்திருக்கிறார்.

இந்த சூழ்நிலையில் ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் வீரர் மேத்யூ ஹைடன் தனது சிறந்த ஒரு நாள் உலகக் கோப்பை அணியில் விராட் கோலிக்கு இடம் தரவில்லை. அவரது அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக கில்கிறிஸ்ட் மற்றும் வீரேந்திர சேவாக் ஆகியோர் இடம் பெற்றிருக்கின்றனர். மூன்றாவது இடத்தில் ஆஸ்திரேலியாவின் ரிக்கி பாண்டிங் சேர்க்கப்பட்டிருக்கிறார்.

- Advertisement -

மிடில் வரிசையில் இந்தியாவின் சச்சின் டெண்டுல்கர், வெஸ்ட் இண்டீஸ் அணியைச் சேர்ந்த பிரைன் லாரா ஆகியோர் இடம் பெற்று இருக்கின்றனர். ஆல் ரவுண்டர்கள் பிரிவில் தென்னாப்பிரிக்கா அணியைச் சேர்ந்த முன்னாள் வீரர் ஜாக் காலிஸ் பாகிஸ்தானின் வக்கார் யூனிஸ் இடம்பெற்று இருக்கின்றனர்.

அதற்குப் பிறகு பந்துவீச்சாளர்களின் பிரிவில் பாகிஸ்தானின் வாசிம் அக்ரம், ஆஸ்திரேலியா அணியின் சுழற் பந்து ஜாம்பவான் ஷேன் வார்னே, முத்தையா முரளிதரன் மற்றும் மெக்ராத் ஆகியோர் இடம்பெற்றிருக்கின்றனர். இதுதான் தனது முழு நேர ஒரு நாள் உலகக் கோப்பை அணி என்று அறிவித்திருக்கிறார். இந்த அணி தற்போது சமூக வலைதளங்களில் அதிகமாக வைரல் ஆகி வரும் நிலையில் விராட் கோலியின் ரசிகர்கள் விராட் கோலி இல்லாதது குறித்து அவரது பெயரைகுறிப்பிட்டு வருகின்றனர்.

இதையும் படிங்க:என் வேலைக்கு தோனியின் இந்த விஷயம் தேவை.. அவர் போலத்தான் என் பயணம் ஆரம்பித்தது – பதக்கம் வென்ற ஸ்வப்னில் குசலே பேட்டி

இதில் ஒரு விஷயம் கூர்ந்து கவனித்தால், இதில் தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கிற வீரர்கள் அனைவருமே கிட்டத்தட்ட ஹைடன் காலகட்டத்தில் விளையாடிய வீரர்களாகவே இருக்கிறார்கள். இதனால் விராட் கோலி 2008ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமானாலும், தனது ஆதிக்கத்தை 2014ஆம் ஆண்டுக்குப் பிறகு வெளிக்காட்ட தொடங்கி இருக்கிறார். இதனால் இவரது அணியில் விராட் கோலிக்கு இடம் கிடைக்காமல் போயிருக்கலாம். இதனால் இன்றைய காலகட்ட அணியை தேர்ந்தெடுக்கும் போது அதில் விராட் கோலிக்கு என்று ஒரு இடம் நிச்சயமாக ஒதுக்கப்பட்டிருக்கும் என்பதே மறுக்க முடியாத உண்மை.

- Advertisement -