நேற்றைய போட்டியில் ஆர்சிபி அணியிடம் ராஜஸ்தான் அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இந்த தோல்வி குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் ராஜஸ்தான் அணியின் கேப்டன் ரியான் பராக் பற்றி கடுமையான முறையில் விமர்சனம் செய்திருக்கிறார்.
தற்போது காயத்தில் இருக்கும் கேப்டன் சஞ்சு சாம்சன் நேற்றைய போட்டியில் விளையாடவில்லை. இதன் காரணமாக இளம் வீரர் ரியான் பராக் அணியை வழி நடத்தினார். மேலும் அவர் வேகப்பந்துவீச்சாளர்கள் நால்வர் இருக்க தாமாக வந்து மூன்று ஓவர்கள் பந்தும் வீசி இருந்தார். இந்த நிலையில் வழக்கம்போல் போட்டியை வெல்வதற்கான நிலையில் இருந்து கடைசி இரண்டு ஓவரில் ராஜஸ்தான் தோல்வி அடைந்தது.
கடைசி இரண்டு ஓவர்கள் 18 ரன்கள்
இந்த போட்டியில் துவக்க ஆட்டக்காரர் ஜெய்ஸ்வால் சிறப்பாக விளையாடிய நல்ல துவக்கத்தை ஏற்படுத்திக் கொடுத்தார். பவர் பிளேவில் 72 ரன்கள் கிடைத்தது. மூன்றாவதாக வந்த நிதிஷ் ராணாவும் சிறப்பான முறையில் விளையாடிகொண்டிருந்தார். இந்த நேரத்தில் 10 பந்துகளில் 22 ரன்கள் எடுத்திருந்த ரியான் பரா தொடர்ந்து அதிரடியாக விளையாட முயற்சி செய்து இறுதியாக விக்கெட்டை இழந்தார்.
மேலும் கடைசி இரண்டு ஓவர்களுக்கு 18 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் துருவ் ஜுரல் துரதிஷ்டவசமாக டிக்கெட்டை இழந்ததால் போட்டியை தோற்கும் நிலை ஏற்பட்டது. இந்த தோல்வி குறித்து பேசி இருந்த ரியான் பராக் ” நாங்கள் பேட்டிங்கில் சுழல் பந்துவீச்சுக்கு எதிராக சிறப்பாக செயல்பட்டு இருக்கலாம். எங்களுக்கு அதற்கான முழு சுதந்திரமும் அணி நிர்வாகத்தால் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆனால் நாங்கள் பேட்டிங் யூனிட்டாக சேர்ந்து அதை செய்யவில்லை” என்று கூறியிருந்தார்.
வீரர்களை குறை சொல்லக்கூடாது
இதுகுறித்து அமித் மிஸ்ரா கூறும் பொழுது ” ஆட்டம் எப்பொழுதும் உங்கள் கைகளில் தான் இருந்தது. நீங்கள் கொடுத்த 14 வைடை கழித்துவிட்டால் கூட நீங்கள் போட்டியில் வெற்றி பெற்று இருக்க முடியும். நீங்கள் நெருக்கடியான நேரத்தில் தவறு செய்து விட்டீர்கள். இப்படி இருக்க மற்றவர்களை எப்படி குறை சொல்ல முடியும்? நீங்கள் 50 ரன் வித்தியாசத்தில் தோல்வி அடையவில்லை. இது ஒரு நெருக்கமான போட்டி”
இதையும் படிங்க : ஐபிஎல் 2025.. சிஎஸ்கே,சன்ரைசர்ஸ் இடையிலான போட்டி.. யாருக்கு வெற்றி வாய்ப்பு.. சஞ்சய் பங்கர் கணிப்பு
“இதே போல நீங்கள் பேட்டிங் செய்யும்பொழுது தவறான நேரத்தில் ஆட்டம் இழக்காமல் இருந்திருந்தால் கூட போட்டியில் வெற்றி பெற்று இருக்கலாம். நெருக்கடியான நேரத்தில் நீங்கள் சரியான ஷாட் விளையாட செய்திருக்க வேண்டும். போட்டியை ஆழமாக எடுத்துச் சென்று முடிப்பதற்கு முயற்சி செய்திருக்க வேண்டும். இதை செய்யாமல் சக வீரர்களை குறை சொல்லக்கூடாது” என்று கூறியிருக்கிறார்.






