“என்னதான் நீங்க என்னை பைனலில் ஆடவிடமால் வெளியே உட்கார வைத்திருந்தாலும்…” – உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தோல்விக்குபின் பேசிய அஸ்வின்!

0
74688

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலில் இந்திய அணி தோல்வியை தழுவிய பிறகு கருத்து தெரிவித்திருக்கிறார் ரவிச்சந்திரன் அஸ்வின்.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதிய உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல் இங்கிலாந்தில் நடைபெற்றது. பைனலில் இந்திய அணி தொடர்ந்து இரண்டாவது முறையாக தோல்வியை தழுவியது. இம்முறை ஆஸ்திரேலிய அணியிடம் 209 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்தது. இதற்காக பல்வேறு விமர்சனங்களும் வந்த வண்ணம் இருக்கின்றன.

- Advertisement -

போட்டியில் டாஸ் வென்று பந்துவீச்சு தேர்வு செய்தது துவங்கி, அணியின் பிளேயிங் லெவனில் நம்பர் ஒன் டெஸ்ட் பவுலர் மற்றும் நம்பர் 2 ஆல்ரவுண்டராக இருந்து வரும் ரவிச்சந்திரன் அஸ்வின் எடுக்கப்படாதது வரை பல்வேறு விமர்சனங்கள் இப்போது வரை வைக்கப்பட்டு வருகின்றன.

ஏனெனில் இங்கிலாந்தில் மூன்றாவது மற்றும் நான்காவது நாட்களில் இந்திய துணைகண்டத்தின் பிட்ச்சுகள் போன்று மாறிவிடும். சுழல் பந்துவீச்சாளர்களுக்கு நன்றாக எடுபடும் என்கிற கருத்துக்கள் நிலவியது. ஆனால் இதை கவனத்தில் கொள்ளாமல் அஸ்வினை எடுக்காமல் தவறு செய்துவிட்டார்கள் என கூறப்படுகிறது.

கடைசியில் பலரின் விமர்சனங்களுக்கு ஏற்றவாறு பிட்ச் சுழல் பந்துவீச்சுக்கு சாதகமாக அமைந்தது. ஜடேஜா இரண்டு விக்கெட்டுகள், லயன் நான்கு விக்கெட்டுகள் வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இப்படியொரு சூழலில் ரவிச்சந்திரன் அஸ்வின் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தோல்விக்கு பிறகு ட்விட்டரில் பதிவிட்டது வைரலாகி வருகிறது. ரவிச்சந்திரன் அஸ்வின் பதிவிட்டதாவது:

“உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலை வெற்றி பெற்றதற்கும், இரண்டு வருடங்களாக நடைபெற்ற உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுற்றுகளை வெற்றிகரமாக முடித்ததற்கும் ஆஸ்திரேலியா அணிக்கு வாழ்த்துக்கள். துரதிஷ்டவசமாக தவறான இடத்தில் நாங்கள் இருப்பது வருத்தம் அளிக்கிறது. இருப்பினும் இரண்டு வருடங்களாக இந்திய அணியினர் வெளிப்படுத்திய சிறப்பான ஆட்டம் அதற்கு ஈடுபாட்டுடன் செயல்பட்ட விதம் என அனைத்திற்கும் இங்கே பாராட்டுகளை தெரிவிக்கவேண்டும்.

அனைத்து குளறுபடிக்கும் மத்தியில் இந்திய அணியில் இந்த இரண்டு வருடங்கள் முழுவதும் பல வீரர்கள் சிறப்பாக செயல்பட்டார்கள். அவர்கள் அனைவருக்கும் அங்கீகாரம் சென்றடைய வேண்டும். இந்த தருணத்தில் என்னுடன் பயணித்த அணியினர் மற்றும் பயிற்சியாளர்கள் உதவியாளர்கள் அனைவருக்கும் என்னுடைய நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். அதீத ஆதரவை கொடுத்திருக்கிறார்கள்.” என்றார்