தோனி ருதுராஜ் இல்லை.. சிஎஸ்கே வை கஷ்டமான நேரத்தில் காப்பாற்றும் ஒரே வீரர் இவர்தான் – அம்பதி ராயுடு பேச்சு

0
40
Ruturaj

நேற்று ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணி லக்னோ அணிக்கு எதிராக அவர்களது சொந்த மைதானத்தில் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், முதலில் பேட்டிங் செய்து 176 ரன்கள் எடுத்தும் தோல்வி அடைந்தது. இந்த போட்டியில் ரவீந்திர ஜடேஜா 40 பந்துகளில் 57 ரன்கள் எடுத்தார். இந்த போட்டி குறித்து முன்னாள் சிஎஸ்கே வீரர் அம்பதி ராயுடு பேசியிருக்கிறார்.

சிஎஸ்கே அணி நேற்று லக்னோ அணிக்கு எதிராக விளையாடிய போட்டியில் ரவீந்திர ஜடேஜா 40 பந்துகளில் ஆட்டம் இழக்காமல் 57 ரன்கள் எடுத்தார். கடைசியில் வந்த தோனி எட்டு பந்துகளில் 28 ரன்கள் அடித்தார். சிஎஸ்கே அணி ஆறு விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் எடுத்தது.

- Advertisement -

முதலில் சி எஸ் கே அணி பேட்டிங் செய்யும்பொழுது ஆடுகளம் மெதுவாகவும் பேட்டிங் செய்வதற்கு கடினமாகவும் இருந்தது. இதன் காரணமாக அனுபவ வீரரான ரவீந்திர ஜடேஜா நான்காவது வீரராக பேட்டிங்கில் அனுப்பப்பட்டார். ஆடுகளம் இருந்த நிலைமைக்கு அவர் அடித்த ரன்கள் மிகவும் சரியானதாகவே இருந்தது.

அதே சமயத்தில் லக்னோ அணி பேட்டிங் செய்த பொழுது பனிப்பொழிவு வந்தது. இதன் காரணமாக அந்த அணி பேட்டிங் செய்வது எளிதாக அமைந்தது. எனவே ஆடுகளத்திற்கு தேவையான ரன்களை சிஎஸ்கே அணி எடுத்த பொழுதிலும் கூட, இந்த காரணத்தினால் அந்த அணியால் வெற்றி பெற முடியவில்லை.

இதுகுறித்து அம்பதி ராயுடு பேசும் பொழுது “சிஎஸ்கே அணியை கடினமான சூழ்நிலைகளில் காப்பாற்றும் ஒரே வீரராக எப்பொழுதும் ரவீந்திர ஜடேஜா மட்டுமே இருந்து வருகிறார். அவரது பேட்டிங் வரிசையை மாற்றினாலும் கூட, அவர் அதை மகிழ்ச்சியாக ஏற்றுக் கொள்கிறார். நேற்று லக்னோ அணிக்கு எதிராக அவர் பேட்டிங் செய்த விதம் மிகவும் அபாரமானது. அணி சிக்கலில் இருந்த பொழுது பேட்டிங் செய்ய வந்த அவர் ஸ்கோர் போர்டை எப்பொழுதும் டிக் செய்து கொண்டே இருந்தார்.

- Advertisement -

இதையும் படிங்க: வெளிய ஒழுங்கா இருக்கனும்.. விதியை மீறிய பொல்லார்டு டிம் டேவிட்.. பிசிசிஐ விதித்த அபராதம்

பந்துவீச்சாளர்களுக்கு சாதகமாக இருந்த ஒரு ஆடுகளத்தில் சிஎஸ்கே அணியை நல்ல ஸ்கோருக்கு கொண்டு சென்றதற்கு முக்கிய காரணம் அவருடைய ஆட்டம்தான். அந்த ஆடுகளத்தில் பேட்டிங் செய்வது எளிதான காரியம் இல்லை. ஆனால் அவர் அதை கடைசி வரை கைவிடவில்லை. சிஎஸ்கே அணியின் இரண்டாவது தூணாக தோனிக்கு அடுத்து அவர் இருந்து வருகிறார். கடந்த ஆண்டு ஐபிஎல் கோப்பையை வெல்ல முக்கிய காரணமாகவும் அவர் இருந்தார்” என்று கூறியிருக்கிறார்.