2024 டி20 WC பைனல்.. பவுண்டரி கயிறு தள்ளி வைக்கப்பட்டது.. சூர்யா கேட்ச் தவறானது – அம்பதி ராயுடு பேட்டி

0
206
Ambati

2024 டி20 உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் டேவிட் மில்லருக்கு சூரியகுமார் யாதவ் கேட்ச் பிடித்த பொழுது பவுண்டரி எல்லையில் கயிறு தள்ளி வைக்கப்பட்டதாக அம்பத்தி ராயுடு கூறியிருப்பது பரபரப்பாக மாறி இருக்கிறது.

இந்த குறிப்பிட்ட டி20 உலகக் கோப்பையின் இறுதிப் போட்டியில் தென் ஆபிரிக்கா அணி எளிதாக வெற்றி பெறக்கூடிய சூழலில் இருந்து கடைசி ஐந்து ஓவர்களில் மோசமாக விளையாடி தோற்றது. இதில் டேவிட் மில்லர் சிக்ஸருக்கு அடித்த பந்தை எல்லை கோட்டுக்கு அருகே சூரியகுமார் யாதவ் உள்ளே வெளியே எனத் தாண்டி அபாரமாக கேட்ச் பிடித்தார். இது வெற்றிக்கு மிக முக்கிய காரணமாக இருந்தது.

- Advertisement -

அப்போதே ஏற்பட்ட சர்ச்சை

அந்த நேரத்தில் சூரியகுமார் கேட்ச் பிடித்ததை சரியான முறையில் கேமரா கோணங்களை வைத்து ஒளிபரப்பாளர்கள் காட்டவில்லை. நடுவர்கள் மிக வேகமாக அவுட் என தீர்ப்பளித்தார்கள். இதன் காரணமாக ஐசிசி மற்றும் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் மீது நிறைய விமர்சனங்கள் வெளியிலிருந்து வந்தது.

இந்த நிலையில் ஐசிசி மிக தாமதமாக எல்லா கேமரா கோணங்களையும் அடக்கிய ஒரு வீடியோவை வெளியிட்டது. அதில் பவுண்டரி எல்லைக்கோட்டின் கயிறு சற்று தூரமாக இருந்தது. ஆனால் சூரியகுமார் அதற்கு உள்ளே இருந்து சரியான முறையில் கேட்ச் பிடித்திருந்தார். எல்லைக்கயிறு ஆரம்பத்தில் இருந்தே வெளியில் இருந்ததாக ஆதாரங்கள் காட்டப்பட்டது. இதனால் சர்ச்சைகள் ஓய்வுக்கு வந்தது.

- Advertisement -

அம்பதி ராயுடு புதிய சர்ச்சை

இந்த நிலையில் அப்போது வர்ணனையாளராக இருந்த அம்பதி ராயுடு பேசும் பொழுது “அந்த போட்டியில் உலகத்தின் பல வர்ணனையாளர்களும் இருந்தார்கள். போட்டி இடைவேளையின்போது அவர்கள் பேசும்பொழுது திரைகளை வைப்பதற்காக பவுண்டரி எல்லைக்கயிறு கொஞ்சம் வெளியில் நகர்த்தப்பட்டது. மேலும் அவர்கள் பேசி முடித்ததும் திரை மற்றும் நாற்காலி நகர்த்தப்பப்பட்டும் எல்லைக்கயிறு பழைய இடத்திற்கு கொண்டுவரப்படவில்லை. இதை நாங்கள் மேலே இருந்து பார்க்கும் பொழுது மிகத் தெளிவாக தெரிந்தது. இது கடவுளின் திட்டமாக அமைந்துவிட்டது”

இதையும் படிங்க : ஆர்சிபி அணிக்கு அவர் எதுவுமே செய்யல.. என்ன விமர்சனம் பண்ணதுக்கு அவர்தான் மன்னிப்பு கேட்டார் – அம்பாதி ராயுடு

“மேலும் அதை இயற்கையான நிலையில் நடந்திருந்தால் அது சிக்ஸர் ஆகியிருக்குமா என்று எனக்குத் தெரியாது. ஆனால் நிச்சயம் சூரியகுமார் யாதவ் எல்லையைத் தாண்டி உள்ளே ஓடி இருப்பார்” என்று கூறியிருக்கிறார். மேலும் எல்லைக்கயிறு நிச்சயம் பழைய நிலைக்கு கொண்டு வரப்பட வேண்டும். அதுவே ஒரு பந்து வீசப்பட்டிருந்தால் அந்தப் பந்து முடிவுக்கு வந்ததும் கொண்டு வரப்பட வேண்டும். இந்த வகையில் அதை இறுதிவரை கவனிக்காததால் இந்திய அணியின் மீது எந்த தவறும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -