கோலிக்கு எதிரா அவர் ரெடியா இருப்பார்.. அவரோட இந்த பலவீனத்தை ஆஸி அணி குறி வைக்கும் – அம்பாத்தி ராயுடு பேட்டி

0
314

இந்திய மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான முதலாவது அரை இறுதி போட்டி நாளை துபாயில் உள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது.

இந்த போட்டி குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் அம்பத்தி ராயுடு சில முக்கிய கருத்துகளை பேசி இருக்கிறார்.

- Advertisement -

இந்தியா ஆஸ்திரேலியா அரை இறுதி

இந்திய அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் விராட் கோலி பாகிஸ்தான் அணிக்கு எதிராக சதம் அடித்து மீண்டும் தனது பேட்டிங் பார்மை நிரூபித்திருக்கிறார். கடந்த நியூசிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்ற கடைசி போட்டியில் 11 ரன்னில் விராட் கோலி விளையாடிக் கொண்டிருந்த போது கிலென் பிலிப்சின் பந்துவீச்சில் அபாரமான கேட்சால் எதிர்பாராத விதமாக விராட் கோலி ஆட்டம் இழந்தார். ஆனால் சமீப காலமாக விராட் கோலி லெக் ஸ்பின் பந்து வீச்சுக்கு எதிராக தடுமாறி வருகிறார். அது வங்கதேச அணிக்கு எதிரான முதல் போட்டியில் அவரது தடுமாற்றம் நன்றாகவே தெரிந்தது.

இந்த நிலையில் அடுத்ததாக நடைபெற உள்ள ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான போட்டியில் லெக் ஸ்பின்னரான ஆடம் ஜம்பா விராட் கோலிக்கு சவாலாக இருப்பார் என்று தெரிகிறது. 2017ம் ஆண்டு முதல் ஒருநாள் போட்டிகளில் விராட் கோலி ஆடாம் ஜம்பா 5 முறை வெளியேற்றி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த லெக் ஸ்பின்னர் விராட் கோலிக்கு எதிராக 73 டாட் பந்துகளை வீசி 245 ரன்கள் கொடுத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சூழ்நிலையில் இது குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் அம்பத்தி ராயுடு சில முக்கிய கருத்துக்களை கூறியிருக்கிறார்.

- Advertisement -

விராட் கோலியின் பலவீனம்

இதுகுறித்து ராயுடு விரிவாக கூறும்போது “ஜம்பா மற்றும் விராட் கோலிக்கான போட்டியாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன். ஏனென்றால் விராட் கோலி சமீப காலமாக லெக் ஸ்பின் பந்துவீச்சுக்கு எதிராக தடுமாறி வருகிறார். ஆனால் கடந்த சில போட்டிகளில் அவர் காட்டியிருக்கும் ஃபார்ம் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக சிறப்பாக செயல்பட நன்றாக உதவும். விராட் கோலி மீது தற்போது எதிர்பார்ப்புகள் அதிகமாக இருக்கிறது. அவர் போட்டியில் கவனம் செலுத்தி அதிக ஸ்கோர் அடிக்க வேண்டும் என்கிற பசி அவரிடம் இருப்பதை தெளிவாக காணலாம்.

இதையும் படிங்க:துபாய் ஆடுகளம் ஸ்பின்னுக்கு சாதகமா.? இத நெனச்சு போனா கண்டிப்பா மாட்டுவீங்க.. இந்திய அணியை எச்சரிக்கும் கவாஸ்கர்

பெரிய சந்தர்ப்பங்களில் விராட் கோலி வழக்கமான சவாலை ஏற்றுக் கொண்டு நமக்கு அந்த கொண்டாட்ட தருணங்களை தருகிறார். இந்த பசியை அவர் அரை இறுதியில் ஒரு பெரிய இன்னிங்ஸாக மாற்றுவார் என்ற நம்பிக்கை இருக்கிறது. நாங்கள் அனைவரும் அவரது சிறந்த ஆட்டத்தை பார்க்க விரும்புகிறோம். அவருக்கு எங்களின் முழு ஆதரவு எப்போதுமே உண்டு” என்று ராயுடு பேசியிருக்கிறார்.

- Advertisement -