துபாய் ஆடுகளம் ஸ்பின்னுக்கு சாதகமா.? இத நெனச்சு போனா கண்டிப்பா மாட்டுவீங்க.. இந்திய அணியை எச்சரிக்கும் கவாஸ்கர்

0
287

இந்தியா கிரிக்கெட் அணி நாளை நடைபெற உள்ள முதல் அரை இறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியா அணியை எதிர்கொள்ள உள்ளது. நேற்று நடைபெற்ற கடைசி லீக் ஆட்டத்தில் நியூசிலாந்து அணியை 44 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வீழ்த்தி இருக்கிறது.

இந்த சூழ்நிலையில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான அரை இறுதி ஆட்டம் குறித்து முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சுனில் கவாஸ்கர் சில முக்கியமான கருத்துக்களை பேசி இருக்கிறார்.

- Advertisement -

இந்தியா ஆஸ்திரேலியா போட்டி

முதல் அரை இறுதி ஆட்டம் நடைபெற உள்ள துபாய் ஆடுகளம் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமான வகையில் இருக்கிறது. இதை சாதகமாக பயன்படுத்திக் கொண்ட இந்திய அணி நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் நான்கு சுழற்பந்து வீச்சாளர்களை களம் இறக்கியது. அக்சார் பட்டேல், ரவிந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ் ஆகியோர் ஏற்கனவே இரண்டு போட்டிகளில் விளையாடி இருந்த நிலையில் நேற்று நடைபெற்ற நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் வருண் சக்கரவர்த்தி வாய்ப்பு பெற்றார்.

அதோடு மட்டுமல்லாமல் அந்த போட்டியில் 5 விக்கட்டுகள் கைப்பற்றி, இந்திய அணி வெற்றி பெறுவதற்கு முக்கிய காரணமாக அமைந்தார். இந்த சூழ்நிலையில் சுழற் பந்துவீச்சை பொறுத்தவரை இந்திய அணி வலுவாக இருக்கும் போது எதிர் அணியான ஆஸ்திரேலியா அணியில் முக்கிய சுழற் பந்துவீச்சாளராக ஆடம் ஜம்பா மட்டுமே இருக்கிறார். இது ஆஸ்திரேலியா அணிக்கு சிக்கலை ஏற்படுத்தும் என்று சுனில் கவாஸ்கர் சில கருத்துக்களை பேசி இருக்கிறார்.

- Advertisement -

கவாஸ்கர் கூறும் கருத்து

இதுகுறித்து கவாஸ்கர் கூறும்போது “இந்த விஷயத்தை மேலோட்டமாக பார்த்தால், ஆஸ்திரேலிய அணியில் ஸ்டார்க், கம்மின்ஸ் மற்றும் ஹேசில்வுட் ஆகியோர் இல்லாத நிலையில் அந்த அணிக்கு சுழற் பந்துவீச்சு முக்கிய பிரச்சினையாக அமைந்துள்ளது. இந்திய அணியை அச்சுறுத்தக் கூடிய சுழற்பந்து தாக்குதல் ஆஸ்திரேலியா அணியிடம் இல்லை. ஆனால் அவர்களிடம் ஆக்ரோஷமான பேட்டிங் இருக்கிறது. எனவே இது ஆஸ்திரேலியாவை துரத்துவதை விட இந்திய அணியை துரத்துவது சிறந்த விஷயமாக இருக்கும்.

இதையும் படிங்க:வருணின் பந்தை அடிக்க முடியாத காரணம் இதான்.. பேட்ஸ்மேன் இந்தத் தப்பை செய்ய கூடாது – ஹர்பஜன் சிங் பேட்டி

துபாய் ஆடுகளம் முழுக்க சுழற் பந்துவீச்சு சாதகமாக அமைந்ததா? என்று கேட்டால் நிச்சயமாக இல்லை என்று தான் கூறுவேன். முதல் சில ஓவர்களில் சுழற்சிக்கு சாதகமாக இருந்ததா என்று கேட்டால் இல்லை. நேரம் செல்லச் செல்ல பனிப்பொழிவு இருந்ததால் சுழலுக்கு அந்த ஆடுகளத்தில் நல்ல பிடிப்பு இருந்தது. அந்த ஆடுகளத்தில் பந்து நன்றாக திரும்பியது. மேலும் நியூசிலாந்து அணிக்கு எதிராக இந்திய சுழற் பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டதன் காரணமாகவே வெற்றி பெற முடிந்தது” என்று கூறுகிறார்.

- Advertisement -