அம்பதி ராயுடுவுக்கு பதிலாக முன்னாள் சிஎஸ்கே வீரரை தட்டித் தூக்கிய சூப்பர் கிங்ஸ் அணி!

0
32843
Csk

இந்திய கிரிக்கெட் வாரியம் நடத்தும் ஐபிஎல் டி20 லீக் தொடரின் வெற்றி உலகெங்கும் பல கிரிக்கெட் வாரியங்களை இப்படியான டி20 லீக்குகளை நடத்த வைக்கிறது. இதில் இருக்கும் லாபத்தை ஐபிஎல் தொடர் வெளிக்காட்டி இருப்பதால் உலகெங்கும் இப்படியான தொடர்கள் நடத்தப்படுகின்றன!

தற்பொழுது இதற்கெல்லாம் உச்சமாக சமீபத்தில் கிரிக்கெட் அறிமுகமாக இருக்கின்ற அமெரிக்காவும் இந்த போட்டிகளத்தில் குதித்து இருக்கிறது. அவர்கள் மேஜர் கிரிக்கெட் லீக் என்ற பெயரில் புதிய டி20 லீக்கை நடத்துகிறார்கள்.

- Advertisement -

இந்தத் தொடரில் மொத்தம் ஆறு அணிகள் கலந்து கொள்கின்றன. இந்தப் போட்டி ரவுண்ட் ராபின் முறையில் நடத்தப்படுகிறது. இதில் புள்ளி பட்டியலில் முதல் நான்கு இடத்தை பிடிக்கும் அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறும். அடுத்து ஐபிஎல் தொடர் மாதிரியான விதிகள் உண்டு.

இந்தத் தொடர் நாளை ஆரம்பிக்கிறது. அமெரிக்கா என்பதால் இந்த போட்டி இந்திய நேரத்தில் காலை 6:00 மணிக்கு நடக்கிறது. இந்த தொடரின் இறுதிப்போட்டி ஜூலை 31ஆம் தேதி நடைபெற்று முடிகிறது. மொத்த மே 19 போட்டிகள்தான் நடக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தத் தொடரில் உள்ள ஆறு அணிகளில் நான்கு அணிகளை ஐபிஎல் உரிமையாளர்கள் வாங்கி இருக்கிறார்கள். ஐபிஎல் தொடரின் வெற்றிகரமான அணியான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி டெக்ஸாஸ் நகரை மையமாகக் கொண்டு அமைக்கப்பட்ட டெக்ஸாஸ் சூப்பர் கிங்ஸ் அணியை வாங்கி இருக்கிறது.

- Advertisement -

இந்த அணியில் இந்த ஆண்டு நடைபெற்ற முடிந்த ஐபிஎல் தொடரிலிருந்து ஓய்வு பெற்ற அம்பதி ராயுடு வாங்கப்பட்டார். ஆனால் சமீபத்தில் நடந்த பிசிசிஐ குழுவில் இப்படி வெளியில் நடக்கும் லீக்குகளில் வீரர்கள் விளையாடுவதற்கான விதிகள் மாற்றப்பட்ட காரணத்தால் அவர் தனிப்பட்ட காரணங்களுக்காக விலகுகிறேன் என்று விலகிக் கொண்டார்.

இதன் காரணமாக தற்பொழுது டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது. விலகிக் கொண்ட அம்பதி ராயுடுக்கு பதிலாக ஏற்கனவே சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் வெற்றிகரமான வீரராக விளங்கிய தென் ஆப்பிரிக்க அணியை சேர்ந்த 44 வயதான சுழற்பந்துவீச்சாளர் இம்ரான் தாகிரை ஒப்பந்தம் செய்திருக்கிறது.

இவர் இதுவரை ஒட்டுமொத்தமாக 378 டி20 போட்டிகளில் விளையாடியிருக்கிறார். அதில் இவர் மொத்தமாக 469 விக்கெட்டுகளை கைப்பற்றி இருக்கிறார். மிகக் குறிப்பாக 10 முறை நான்கு விக்கெட்டுகளையும், மூன்று முறை ஐந்து விக்கெட்டுகளையும் வீழ்த்தி இருக்கிறார்.

டெக்ஸா சூப்பர் கிங்ஸ் அணிக்கு பாப்டூ ப்ளீசிஸ் கேப்டனாக பொறுப்பேற்றுக் கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த அணியில் தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் பயிற்சியாளராக உள்ள டிவைன் பிராவோ, மேலும் இந்த அணியின் துவக்க ஆட்டக்காரர் கான்வோ, டேவிட் மில்லர் என நட்சத்திர வீரர்கள் இருக்கிறார்கள்.