இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் சஞ்சு சாம்சன் ஷார்ட் பந்தில் தடுமாறி ஆட்டம் இழந்து வருகிறார். இருந்தாலும் அவருடைய பலவீனம் இப்படியான பந்து கிடையாது என அம்பதி ராயுடு கூறியிருக்கிறார்.
தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்று முடிந்திருக்கும் மூன்று டி20 போட்டிகளில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் சஞ்சு சாம்சன் வேகப்பந்து வீச்சில் ஷார்ட் பந்தில் ஆட்டம் இழந்து இருக்கிறார். மேலும் அவர் மூன்று போட்டிகளில் 34 ரன்கள் மட்டுமே எடுத்து இருக்கிறார். இந்த நிலையில் இப்படியான பந்துகளை எப்படி விளையாட வேண்டும்? என்பது குறித்து அம்பதி ராயுடு கூறியிருக்கிறார்.
சூரியகுமார் யாதவ் இதை செய்ய வேண்டும்
இதுகுறித்து அம்பதி ராயுடு பேசும் பொழுது “நாம் முதலில் சஞ்சு சாம்சனை எடுத்துக் கொண்டால் அவர் தற்போது ஆட்டம் இழந்து வரும் வகையில் ஆட்டம் இழக்க வேண்டிய அவசியம் கிடையாது. அவர் ஆரம்பத்தில் அந்த பந்துவீச்சாளர்களை விட்டு பின்பு மற்றவர்களை தாக்கி விளையாடலாம். அதே சமயத்தில் எந்த வேகப்பந்துவீச்சாளரும் சூர்யாவுக்கு பந்தில் வேகம் கொடுப்பதில்லை”
“வேகத்துக்கு எதிராக சூர்யா சிறப்பாக விளையாடுகின்ற காரணத்தினால், எந்த அணியும் சூர்யாவுக்கு பந்தில் வேகம் கொடுப்பதில்லை என்கின்ற திட்டத்தோடு வருகிறார்கள். அதனால் சூர்யா சிறிது நேரம் எடுத்துக் கொள்ள வேண்டும். அவர் சிறிது நேரம் எடுத்து நின்றால் பின்பு தானாகவே அவருக்கு தேவையான பந்துகள் கிடைக்க ஆரம்பிக்கும்”
சஞ்சு சாம்சன் இதை செய்ய வேண்டும்
“சஞ்சு சாம்சன் மனநிலையில் எந்த பிரச்சனையும் இல்லை அவர் நல்ல முறையிலேயே காணப்படுகிறார். அவர் கொஞ்சம் இடம் கொடுத்து வேகப்பந்துவீச்சில் விளையாட நினைக்கின்ற காரணத்தினால், அவருடைய கால் லெக் ஸ்டெம்பில் இருக்கிறது. இந்த நேரத்தில் நீங்கள் புல் ஷாட் விளையாட நினைக்கும் பொழுது உங்கள் கைகளை ஓபன் செய்ய முடிவதில்லை”
இதையும் படிங்க : 2 மாதம் கழித்து தான் சஞ்சு சாம்சனை விமர்சனம் செய்வேன்.. பின்னணி காரணம் இதுதான் – கெவின் பீட்டர்சன் பேட்டி
“நீங்கள் அப்படியான முறையில் மூமண்ட் செய்து ரூம் கொடுத்து ஷார்ட் பந்தை விளையாட நினைக்கும் பொழுது, பந்து உங்களை பின் தொடர்ந்து உடலுக்குள் வருவதற்கு வாய்ப்புகள் அதிகம். எனவே அப்படி இருக்கும் பொழுது அதை உங்களால் சரியாக புல் ஷாட் அடிக்க முடியாது. எனவே நீங்கள் ஃபுல் ஷாட் விளையாட நினைக்கும் பொழுது, பந்தின் லைனுக்கு வந்து விளையாடினால் எளிதாக மாறிவிடும். சந்து சாம்சன் இதை செய்தாலே போதும். அவருக்கு ஷார்ட் பந்தில் எந்த பலவீனமும் இல்லை” என்று கூறி இருக்கிறார்.