தற்போது இந்திய டி20 அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் அபிஷேக் சர்மா மற்றும் சஞ்சு சாம்சன் இருவரது பலம் மற்றும் பலவீனங்கள் குறித்து இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் கெவின் பீட்டர்சன் பேசியிருக்கிறார்.
தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிராக மூன்று டி20 போட்டிகள் நடைபெற்ற முடிந்திருக்கும் நிலையில் இந்திய தொடக்க ஜோடியில் அபிஷேக் ஷர்மா மட்டுமே முதல் போட்டியில் அரைசதம் அடித்தார். சஞ்சு சாம்சன் இதுவரை பெரிய இன்னிங்ஸ் விளையாடவில்லை. எனவே திடீரென இந்திய தொடக்க ஜோடி பற்றியான விமர்சனங்கள் வழியாக ஆரம்பித்திருக்கிறது.
சஞ்சு சாம்சன் பலவீனம்
தற்போது முதல் மூன்று போட்டிகளில் விளையாடியிருக்கும் சஞ்சு சாம்சன் 34 ரன்கள் மட்டுமே எடுத்து இருக்கிறார். இதில் முக்கியமாக கவலை அளிக்கக்கூடிய விஷயமாக அவர் வேகப்பந்துவீச்சாளர் ஆர்ச்சரின் ஷார்ட் பந்துகளுக்கு ஒரே முறையில் ஆட்டம் இழந்து இருக்கிறார். இதுவே அவர் ஆட்டம் விளக்கும் விதத்தில் கவலை அளிக்கும் விஷயமாக மாறி இருக்கிறது.
இது குறித்து பேசி இருக்கும் கெவின் பீட்டர்சன் கூறும் பொழுது “நீங்கள் இப்படியான சந்தர்ப்பங்களில் சிக்கிக் கொள்வீர்கள். இதுதான் வாழ்க்கை என்று நான் நினைக்கிறேன். நீங்கள் பேட்டிங் வரிசையில் தொடக்க இடத்தில் வரும் பொழுது ரிஸ்க் எடுத்து ஷாட் விளையாட வேண்டும். அபிஷேக் ஷர்மா அப்படித்தான் விளையாடுகிறார். எனவே நீங்கள் அங்கு அதிரடியாக ரிஸ்க் எடுத்து விளையாடும் பொழுது சில நேரம் வெல்வீர்கள் சில நேரம் தோல்வியடைவீர்கள். ஆனால் பெரும்பாலும் சஞ்சு சாம்சன் சிறப்பான முறையில் வந்திருக்கிறார்”
இரண்டு மாதத்திற்கு விமர்சிக்க மாட்டேன்
“சஞ்சு சாம்சன் மனதளவில் சிறப்பாக இருக்கக்கூடியவர் என்று நான் நினைக்கிறேன். ஒரு பேட்டராக அவரை எனக்கு மிகவும் பிடிக்கும். நான் அவரை நேசிக்கிறேன். கடந்த சில ஆண்டுகளாக இந்திய அணியில் அவருக்கு நிலையான இடமில்லாதது எனக்கு ஆச்சரியத்தை அளித்தது. ஆனால் தற்போது அவருக்கு இந்திய டி20 அணியின் டாப் ஆர்டரில் ஒரு இடம் கிடைத்திருக்கிறது. ஆனால் பாருங்கள் இப்படியான விஷயங்கள் நடக்கத்தான் செய்யும்”
இதையும் படிங்க : சச்சின் இல்லை.. கவாஸ்கருக்கு பிறகு இவரே சிறந்த தொடக்க பேட்ஸ்மேன் – கங்குலி அதிரடி கருத்து
“அவர் தற்போது ஷார்ட் பந்துகளில் மூன்று முறை ஆட்டம் இழந்திருக்கிறார். இது அடுத்த ஆறு வாரங்கள் அல்லது இரண்டு மாதங்களுக்கு தொடர்ந்தால் நான் அவரது பேட்டிங் டெக்னிக் குறித்து கேள்வி எழுப்புவேன். ஆனால் அவர் அந்த வகையான பந்தை சிறப்பான முறையில் விளையாட முறையில் விளையாடக்கூடியவர் என்றே நான் நினைக்கிறேன். இந்த காரணத்தினால் நான் இது குறித்து அவரை விமர்சனம் செய்ய மாட்டேன்” என்று கூறியிருக்கிறார்.