நேற்று ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் அணிக்கு எதிராக சிஎஸ்கே அணி ஆறு ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இந்தப் போட்டியில் மூன்று துறைகளிலுமே சிஎஸ்கே அணி விளையாடிய விதம் சிஎஸ்கே முன்னாள் வீரர் அம்பதி ராயுடு வருத்தம் தெரிவித்திருக்கிறார்.
இந்த குறிப்பிட்ட போட்டியில் சிஎஸ்கே அணியின் பேட்ஸ்மேன்களில் கேப்டன் ருதுராஜ் தவிர வேறு யாரும் சிறப்பாக செயல்படவில்லை. மேலும் மிக முக்கியமாக கடந்த இரண்டு போட்டிகளாக ஃபீல்டிங் மிகவும் மோசமாக இருந்து வருகிறது. இதுவும் சிஎஸ்கே அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்திருக்கிறது.
திடீரென மாறிய சூழ்நிலை
சிஎஸ்கே அணி நடப்பு ஐபிஎல் தொடரில் முதல் போட்டியில் தங்களது முக்கிய எதிரியான மும்பை இந்தியன்ஸ் அணியை சொந்த மைதானத்தில் வென்று மிகச் சிறப்பாக ஆரம்பித்தது. ஆனால் அடுத்து ஆர்சிபி அணிக்கு எதிராக தோல்வி அடைந்த உடனேயே சொந்த அணி ரசிகர்களாலேயே விமர்சிக்கப்படும் அளவுக்கு மாறிவிட்டது.
இத்தோடு நேற்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக தோல்வி அடைந்ததும் சிஎஸ்கே அணியின் பலவீனங்கள் அனைத்துமே வெளிச்சத்திற்கு வந்துவிட்டது. இந்த தொடரில் இவர்கள் மேற்கொண்டு வெற்றி பெறுவார்களா என்கின்ற சந்தேகமே உருவாகி விட்டது. இந்த நிலையில் அம்பதி ராயுடு சிஎஸ்கே அணியின் செயல்பாட்டை பார்த்து மிகவும் வருத்தம் அடைந்து இருப்பதாக கூறி இருக்கிறார்.
இதைப் பார்க்கவே வேதனையா இருக்கு
இதுகுறித்து அம்பதி ராயுடு பேசும் பொழுது “நேற்றைய போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிடமிருந்து சில அற்புதமான பீல்டிங்கை பார்த்தோம். இது பார்ப்பதற்கு மிகவும் அரிதானதாக இருந்தது. அவர்கள் இளம் பக்கமாக இருந்தாலும் கூட அவர்கள் செயல்படும் விதத்தில் ஆட்ட விழிப்புணர்வு அருமையாக இருந்தது. அதே சமயத்தில் சிஎஸ்கே அணியை பார்க்கும் பொழுது ஒன்று இரண்டு முறை பந்தை தடுக்க மட்டுமே செய்தார்கள். மற்றபடி பெரிதாக எதுவும் இல்லை”
இதையும் படிங்க : ருதுராஜ் பேசறத ஜீரணிக்கவே முடியல.. கேப்டன் பதவியை காப்பாத்த பொய்யா சொல்றார் – மனோஜ் திவாரி குற்றச்சாட்டு
“சிவம் துபே மிகவும் சிறப்பாக விளையாடிய பொழுது ரியான் பராக் அவருக்கு பிடித்த கேட்ச் ஆட்டத்தின் பெரிய திருப்புமுனையாக இருந்தது. சிஎஸ்கே இதற்கு முன்பு அவர்களுடைய மோசமான பீல்டிங் செயல்பாட்டுக்காக அறியப்பட்டதில்லை. எளிய கேட்ச் வாய்ப்பை தவற விடுவது, பந்தை பிடிக்க போராடுவது போன்றவை உடனடியாக சரி செய்யப்பட வேண்டும். அவர்களின் சில தவறுகளை பார்ப்பதற்கு வேதனையாக இருக்கிறது” என்று கூறி இருக்கிறார்.






