சிஎஸ்கே ஸ்பின் கூட்டணி.. கோலிய ஒன்னும் செய்ய முடியாது.. இதான் காரணம் – தினேஷ் கார்த்திக் பேட்டி

0
146
Virat

தற்போது ஆர்சிபி அணியின் மென்டராக இருந்து வரும் தினேஷ் கார்த்தி சுழல் பந்துவீச்சுக்கு எதிராக சிறப்பாக விராட் கோலி விளையாடுவார் என நம்பிக்கை தெரிவித்திருக்கிறார். மேலும் அதற்கான காரணங்கள் குறித்து விளக்கியிருக்கிறார்.

இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சிஎஸ்கே மற்றும் ஆர்சிபி அணிகள் மோதிக்கொள்ளும் ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்து இருக்கும் முக்கிய போட்டி நடைபெற இருக்கிறது. கடந்த ஆண்டு இரு அணிகளும் மோதிய போட்டியில் ஆர்சிபி அணி வென்ற பொழுது சில சர்ச்சையான சம்பவங்கள் நடைபெற்றது. இதன் காரணமாக இந்த போட்டிக்கு பெரிய எதிர்பார்ப்பு உருவாகி இருக்கிறது.

- Advertisement -

சிஎஸ்கே அணியின் பலம்

தற்போது சென்னை சேப்பாக்கம் ஆடுகளம் சுழல் பந்துவீச்சிக்கு சாதகமாக காணப்படுகிறது. அதே சமயத்தில் சென்னை அணியில் ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் நூர் அகமது என சர்வதேச தரம் கொண்ட 3 சுழல் பந்துவீச்சாளர்கள் இருக்கிறார்கள். இவர்களை எதிர்த்து வெளிநாட்டு வீரர்கள் சிறப்பாக விளையாடி போட்டியை சிஎஸ்கே அணிக்கு எதிராக வெல்வது கடினம்.

மேலும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக நடப்பு ஐபிஎல் தொடரில் இதே மைதானத்தில் சிஎஸ்கே அணிக்கு ஸ்பின்னர் நூர் அகமத் 4 விக்கெட் கைப்பற்றி வெற்றிக்கு மிக முக்கிய காரணமாக இருந்தார். எனவே ஆர்சிபி பேட்ஸ்மேன்கள் சென்னை சேப்பாக்கம் ஆடுகளத்தில் சிஎஸ்கே சுழல் பந்துவீச்சாளர்களை எதிர்த்து விளையாடுவது பெரிய சவாலாக இருக்கும் என கூறப்பட்டு வருகிறது. குறிப்பாக ஸ்பின்னர் களுக்கு எதிராக விராட் கோலி தடுமாறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

விராட் கோலிக்கு எந்த பிரச்சனையும் இல்லை

இதுகுறித்து தினேஷ் கார்த்திக் பேசும்பொழுது “விராட் கோலி சுழல் பந்துவீச்சுக்கு எதிராக சிறப்பாக விளையாடி வருகிறார். குறிப்பாக வெள்ளை பந்து கிரிக்கெட்டில் மிகவும் சிறப்பாக இருக்கிறார். எனவே நான் பழைய புள்ளி விபரங்களுக்குள் ஆழமாக செல்ல விரும்பவில்லை. எனக்கு அதிகமாக நினைவில்லை. சமீபத்தில் எடுத்துக் கொண்டால் டி20 உலக கோப்பை இறுதிப்போட்டி மற்றும் சாம்பியன்ஸ் டிராபியில் அவர் சிறப்பாக விளையாடியிருக்கிறார்”

இதையும் படிங்க : ஐபிஎல்ல இனி வாய்ப்பு இல்லை.. இங்கிலாந்து போலாம்னு முடிவு செஞ்சேன்.. அப்பதான் ஜாகீர்பாய் போன் பண்ணார் – தாகூர் பேட்டி

“எனவே அவர் எப்பொழுதும் போல சிறப்பாக பேட்டிங் செய்கிறார் என்று நான் நினைக்கிறேன். அவர் இப்பொழுதும் கூட ஒரு ஷாட்டில் வேலை செய்ய வேண்டும் என்று நினைக்கிறார். அவர் அந்த அளவுக்கு பசியோடு ஆர்வமாக இருக்கிறார். அவர் தொடர்ந்து முன்னேறி செல்ல விரும்புகிறார். இதுவரையில் ஐபிஎல்லில் அவர் இதை செய்து வந்திருக்கிறார்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -