இம்பேக்ட் பிளேயர் ரூலை வச்சி.. கேப்டன்சியில தோனி மாஸ் பண்ண போறாரு- அம்பதி ராயுடு தகவல்

0
397
Dhoni

இந்திய கிரிக்கெட் வாரியத்தால் மிக வெற்றிகரமாக 16 ஆண்டுகளாக தொடர்ந்து நடத்தப்பட்டு வரும் ஐபிஎல் சீசனின் 17 வது சீசன் இன்னும் சில நாட்களில் மார்ச் 22 ஆம் தேதி துவங்க இருக்கிறது. முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் பலப்பரிட்சை நடத்துகின்றன.

இந்த முறை ஐபிஎல் சீசன் சென்னையில் வைத்து துவங்குவதால் சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்கள் மிகப்பெரிய உற்சாக மனநிலையில் காணப்படுகிறார்கள். மேலும் விராட் கோலி அங்கம் வகிக்கும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு எதிரான போட்டி என்கின்ற காரணத்தினால், இரண்டு அணிகளுமே தென்னிந்திய பகுதியைச் சேர்ந்தவர் என்பதால், இந்த பகுதியில் இன்னும் கிரிக்கெட் உற்சாகம் கரைபுரண்டு ஓடுகிறது.

- Advertisement -

தற்பொழுது 42 வயதாகும் மகேந்திர சிங் தோனி இந்த ஐபிஎல் தொடருடன் ஓய்வு பெற்று விடுவார் என்பது இந்த முறை பலரது உறுதியான எண்ணமாக மாறி இருக்கிறது. ஏனென்றால் அடுத்த ஆண்டு கட்டாயம் மெகா ஏலம் நடத்தப்படும் என்று பிசிசிஐ தரப்பில் பொருளாளர் கூறியிருந்தார். எனவே மெகா ஏலத்தில் மீண்டும் தோனியை உள்ளே கொண்டு வர மாட்டார்கள் என்று நம்பப்படுகிறது.

அதே சமயத்தில் தோனி இதற்கு முன்பே ஓய்வு பெற நினைத்திருந்தபொழுது அந்த சீசனில் ரவீந்திர ஜடேஜாவை திடீரென கேப்டனாக ஆக்கி, இவர் விக்கெட் கீப்பராக களத்தில் இருந்து ஜடேஜாவை மட்டும் வழி நடத்தினார். ஆனால் ஜடேஜா கேப்டன்சி பொறுப்புக்கு சரியானவராக இல்லாத காரணத்தினால் மீண்டும் நடுவில் மகேந்திர சிங் தோனியை கேப்டனாக வந்தார்.

தற்போது முலம் காலில் அறுவை சிகிச்சை செய்து மீண்டு வந்திருக்கும் மகேந்திர சிங் தோனி, பழைய முறையில் விளையாடுவாரா? அவருடைய காயம் எத்தகைய நிலையில் இருக்கும்? இம்பேக்ட் பிளேயர் விதியை பயன்படுத்திய ஏதாவது செய்வாரா? என்பது குறித்தெல்லாம், கடந்த ஆண்டு கோப்பையுடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருந்தும் ஐபிஎல் தொடரில் இருந்தும் ஓய்வு பெற்ற அம்பதி ராயுடு வெளிப்படையாக சில விஷயங்களை பேசி இருக்கிறார்.

- Advertisement -

இதுகுறித்து அம்பதி ராயுடு கூறும்பொழுது ” இம்பேக்ட் பிளேயர் விதியின் மூலம் அவர் வெளியில் அமர்ந்து கொண்டு, தொடரின் நடுவில் யாரையாவது கேப்டனாக அவர் உள்ளே கொண்டு வரலாம். எனவே இந்த ஆண்டு சிஎஸ்கே அணிக்கு ஒரு மாற்றமான ஆண்டாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன். ஆனால் அவர் கேப்டனாக ஆரம்பத்தில் சிஎஸ்கே அணியை வழிநடத்துவார். தனிப்பட்ட முறையில் எனக்கு அவர் கேப்டனாக தொடர வேண்டும் என்பதுதான் விருப்பம்.

இதையும் படிங்க : எதிரணிகள் பாவம்.. இந்த இந்திய வீரர் 1000 ரன்கள் அடிக்கப் போறார்.. சம்பவம் இருக்கு – இர்பான் பதான் பேச்சு

அவர் இந்த ஐபிஎல் சீசனில் விளையாட முடிவு செய்திருந்தால் அவருடைய உடல் தகுதி 10 சதவீதம் இருந்தால் கூட அவர் நிச்சயம் விளையாடுவார். ஏனென்றால் அவர் தன் வாழ்க்கையில் பல காயங்களுடன் தொடர்ந்து விளையாடுகிறார். கடந்த ஐபிஎல் சீசனில் கூட முழங்காலில் ஏற்பட்ட காயத்தை தாங்கிக்கொண்டுதான் அவர் தொடர் முழுவதும் விளையாடினார். எப்பொழுதுமே காயங்கள் அவர் விளையாடுவதை ஒருபோதும் தடுக்கவே முடியாது. எனவே அவர் முடிவு செய்து இருந்தால் நிச்சயம் விளையாடுவார்” என்று கூறியிருக்கிறார்.