டி20 உ.கோ.. திடீரென கோலிக்கு ஆதரவாக வந்த அம்பதி ராயுடு.. பியூஸ் சாவ்லா தெரிவித்த சம்மதம்

0
24
Virat

நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் இன்று இந்திய அணி அமெரிக்க அணிக்கு எதிராக நியூயார்க் மைதானத்தில் விளையாடிக் கொண்டிருக்கிறது. இந்த போட்டியில் வெல்லும் பட்சத்தில் இந்திய அணி அடுத்த சுற்றுக்கு தகுதி பெறும். இந்த நிலையில் விராட் கோலிக்கு ஆதரவாக அம்பதி ராயுடு முக்கியமான விஷயம் பற்றி பேசி இருக்கிறார்.

இந்த டி20 உலக கோப்பை தொடருக்கு அறிவிக்கப்பட்ட 15 பேர் கொண்ட அணியில் துவக்க ஆட்டக்காரர்களாக ரோகித் சர்மா மற்றும் ஜெய்ஸ்வால் இருவரும் இடம் பெற்று இருந்தார்கள். இந்த நிலையில் ஜெய்ஸ்வால் புறக்கணிக்கப்பட்டு ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் தொடக்க ஆட்டக்காரர்களாக இரண்டு போட்டிகளாக களமிறங்கி வருகிறார்கள்.

- Advertisement -

இதன் காரணமாக பகுதி நேரமாக மிதவேகப்பந்து வீசக்கூடிய சிவம் துபே அணியில் இடம் பெறுவதற்கான வாய்ப்பு உருவானது. இது பிளேயிங் லெவனை தேவைக்கு தகுந்தபடி மாற்றி அமைத்துக் கொள்ள மிகவும் வசதியாக இருக்கிறது.

அதே சமயத்தில் விராட் கோலி இரண்டு போட்டிகளிலும் சேர்த்து 62 ஸ்ட்ரைக் ரேட்டில் ஐந்து ரன்கள் மட்டுமே எடுத்திருக்கிறார். மேலும் அவர் மூன்றாவது இடத்திற்கு சென்று வழக்கம் போல் விளையாட வேண்டும் என சில முன்னாள் வீரர்கள் பேசிக் கொண்டு வருகிறார்கள்.

- Advertisement -

ஐபிஎல் தொடரில் கடுமையாக விராட் கோலியை விமர்சித்து வந்த அம்பதி ராயுடு இது குறித்து பேசும் பொழுது “இப்போது துவக்க ஆட்டக்காரர்களை மாற்ற வேண்டிய அவசியம் இல்லை. விராட் கோலி நல்ல கவர் ட்ரைவ் ஒன்றை பாகிஸ்தானுடன் அடித்தார். பாகிஸ்தானுக்கு எதிராக ஆட்டம் இழந்த பந்தில் கூட அவர் நல்ல டச்சில் இருந்தார்.விராட் மற்றும் ரோகித் இருவரும் நல்ல இண்டெண்ட் உடன் பேட்டிங் செய்தால், இருவரில் ஒருவர் நின்றாலே போட்டியை முடித்து விடுவார்கள். எனவே அவர்களே தொடர வேண்டும்” என்று கூறியிருக்கிறார்.

இதையும் படிங்க : ரோகித் சர்மாகிட்ட இத நான் கட்டாயம் கேட்கணும்.. பெரிய தப்பு பண்ணிட்டு இருக்காரு – கபில்தேவ் விமர்சனம்

இதற்கு பதில் அளித்து பேசி இருக்கும் பியூஸ் சாவ்லா “அம்பதி ராயுடு பாய் கூறியது போல விராட் கோலி ஆட்டம் இழந்த இரண்டு ஆட்டத்திலும் அவருடைய இன்டெண்ட் சிறப்பாக இருந்தது. டி20 கிரிக்கெட் சில நேரங்களில் உங்கள் வழியில் செல்லாது. ஆனால் ஒரு பேட்டர் விளையாடும் வகையில் அவர் எப்படியான பார்மில் இருக்கிறார் என்று தெரிந்து கொள்ளலாம். விராட் கோலி சிறப்பான ஃபார்மில் இருக்கிறார். எனவே அவர் தொடர வேண்டும்” எனக் கூறியிருக்கிறார்.

- Advertisement -