ருதுராஜ் சொல்ற மாதிரி ஆடினா சிஎஸ்கே ஜெயிக்கவே முடியாது.. இதைத்தான் செஞ்சிருக்கணும் – அம்பதி ராயுடு பேட்டி

0
8
Ambati

நேற்றைய போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக சிஎஸ்கே அணி எப்படி விளையாடி இருக்க வேண்டும்? என்பது குறித்து முன்னாள் சிஎஸ்கே வீரர் அம்பதி ராயுடு பேசியிருக்கிறார்.

இந்த போட்டியில் முதலில் பேட்டிக் செய்த சிஎஸ்கே அணி அதிரடியாக விளையாட முயற்சி செய்து கண்டிஷனை மதிக்காமல் ஆடியதால் 127 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட் ஆனது. தொடர்ந்து விளையாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் 12.1 ஓவர்களில் இழப்பை எட்டி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

- Advertisement -

ருதுராஜ் கருத்து

தற்போது ஐபிஎல் தொடரில் இம்பக்ட் பிளேயர் விதி இருக்கின்ற காரணத்தினால் கூடுதல் பேட்ஸ்மேன் உடன் எல்லா அணிகளும் விளையாடுகின்றன. இதன் காரணமாக முதலில் பேட்டிங் செய்யும் பொழுது எவ்வளவு ரன்கள் சரியாக இருக்கும் என்று முடிவு செய்ய முடியவில்லை என ருதுராஜ் தெரிவித்திருந்தார்.

மேலும் இதன் காரணமாக நமக்கு கண்டிஷன் எதிராக இருந்தாலும் முதலில் பேட்டிங் செய்யும்பொழுது அதிரடியாக விளையாட வேண்டிய அவசியம் இருப்பதாகவும், அப்படி விளையாடும் பொழுது இப்படி குறைந்த ஸ்கோருக்கு ஆல் அவுட் ஆவது நடப்பதாகவும் அவர் கூறியிருந்தார். தற்போது இதற்கு அம்பதி ராயுடு எதிராக கருத்து சொல்லி இருக்கிறார்.

- Advertisement -

இப்படிதான் ஆட வேண்டும்

இதுகுறித்து அம்பதி ராயுடு பேசும் பொழுது ” கண்டிஷன் பேட்டிங் செய்வதற்கு கடினமாக இருந்தது உண்மை. எனவே நீங்கள் அதற்கு ஏற்றபடி பொறுமையுடன் கவனமாக விளையாட வேண்டும். அதற்கு சரியான பேட்ஸ்மேன்கள் சிஎஸ்கே அணியில் இருந்தார்கள். ஆனால் அவர்கள் தவறான ஷாட் விளையாடி வெளியேறினார்கள். முதல் நான்கு ஐந்து ஓவர்களில்தான் அவர்கள் ஆட்டத்தை இழந்தார்கள். இன்னும் இரண்டு விக்கெட் குறைவாக அந்த இடத்தில் இழந்திருந்தால் 160 ரன்கள் எடுத்திருக்கலாம். அது இந்த ஆடுகளத்தில் கடினமாக இருக்கும்”

இதையும் படிங்க : கண்கலங்கிய ஜடேஜா.. 12-13 வருஷங்கள் சிஎஸ்கேவுக்கு ஆடிட்டேன்.. தாங்க முடியல – போட்டியில் என்ன நடந்தது?

“இன்னும் கொஞ்சம் கவனமாகவும் பொறுமையாகவும் விளையாட வேண்டி இருந்தது. இவை இளம் அணி என்பதால் ஒருவருடன் ஒருவர் இணைந்து ஆட்டத்தை எடுத்துச் செல்வதற்கு இன்னும் சில காலம் தேவைப்படலாம். ஆனால் உண்மையாக இப்படி எல்லாம் காரணம் சொல்ல முடியாது” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -