சிஎஸ்கே அணிக்காக பிளேயராக ஆடும் பிராவோ, ராயுடு… அணி நிர்வாகம் எடுத்த அதிரடி முடிவு! – என்ன நடக்கிறது?

0
11246

டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் அணிக்காக பிராவோ, ராயுடு, டெவான் கான்வெ உள்ளிட்டோர் எடுக்கப்பட்டுள்ளார்கள்.

அமெரிக்காவில் நடைபெற உள்ள மேஜர் லீக் கிரிக்கெட் தொடரில், சிஎஸ்கே, மும்பை இந்தியன்ஸ், ராஜஸ்தான், கொல்கத்தா ஆகிய அணிகள் உரிமையாளர்கள் புதிய அணிகளை வாங்கியுள்ளார்கள். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி டெக்சாஸ் அணியை வாங்கி அதற்கு டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் என்று பெயரிட்டுள்ளது.

- Advertisement -

முதல் முறையாக அமெரிக்காவில் மேஜர் கிரிக்கெட் லீக் நடைபெறுகிறது. இதில் வீரர்களுக்கான ஏலம் மற்றும் ஒப்பந்தம் நடைபெற்றது. அதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மற்றொரு அணியான டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் அணிக்கு டெவான் கான்வே, டிவைன் பிராவோ, மிட்ச்சல் சாந்தனர் ஆகிய சிஎஸ்கே வீரர்கள் எடுக்கப்பட்டுள்ளார்கள்.

ஜோஹன்னஸ்பெர்க் சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடும் தென்னபிரிக்க வீரர் ஜெரால்டு கோயிட்ஸே மற்றும் ஆஸி., வீரர் டேனியல் சம்ஸ் ஆகியோரும் எடுக்கப்பட்டிருக்கின்றனர்.

2023 ஆம் ஆண்டு ஐபிஎல் சீசனுடன் தன்னுடைய ஓய்வு முடிவை அறிவித்த அம்பத்தி ராயுடு பிசிசிஐ விதிகளின் வரமாட்டார். இந்நிலையில் சர்வதேச லீக் போட்டிகளில் அவர் விளையாடிக் கொள்ளலாம் என்கிற சுதந்திரம் இருக்கிறது. இதன் அடிப்படையில் டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் அணிக்கு ராயுடு தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார்.

- Advertisement -

பிராவோ சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பௌலிங் பயிற்சியாளராக இருந்து வருகிறார். அதேநேரம் டெக்சாஸ் அணிக்கும் பவுலிங் பயிற்சிகள் மேற்கொள்வார் பிளேயராகவும் இருப்பார் என்கிற அறிவிப்புகள் வந்திருக்கின்றன. இந்த அணிக்கு தலைமை பயிற்சியாளராக ஸ்டீபன் பிளமிங் நியமிக்கப்பட்டிருக்கிறார. சிஎஸ்கே அணி உட்பட ஜோகன்னஸ்பெர்க் சூப்பர் கிங்ஸ், டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் என மொத்தம் மூன்று அணிகளுக்கு தலைமை பயிற்சியாளராக ஸ்டீபன் பிளமிங் இருப்பது குறிப்பிடத்தக்கது.