ஆர்சிபி பெரிய பேட்டர்ஸ் கிரீம் கேக் மட்டும்தான் சாப்பிடுவாங்க.. 16 வருஷமா தோற்க இதான் காரணம் – அம்பதி ராயுடு விமர்சனம்

0
257

நேற்று நடைபெற்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயின்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டியில் லக்னோ அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூர் அணியை வீழ்த்தியது. பெங்களூர் அணியின் தோல்விக்கு சில முக்கிய காரணங்களை கூறியிருக்கிறார் சிஎஸ்கே முன்னாள் வீரர் அம்பத்தி ராயுடு.

பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் நேற்று நடைபெற்ற போட்டியில், முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணி 20 ஓவர்கள் முடிவில் 181 ரன்கள் குவித்தது. பின்னர் 182 ரன்கள் குவித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பெங்களூர் அணிக்கு அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் விராட் கோலி 22 ரண்களும், பெங்களூர் அணியின் கேப்டன் பாப் டூ ப்ளஸ்சிஸ் 19 ரன்களும், ஆல் ரவுண்டர் மேக்ஸ்வெல் டக் அவுட் ஆகியும், கேமரூன் கிரீன் 9 ரன்களிலும் ஆட்டமிழந்து வெளியேறினர்.

- Advertisement -

இக்கட்டான தருணங்களில் முன்னணி பேட்ஸ்மேன்கள் அனைவரும் ஆட்டம் இழந்ததால் இந்திய இளம் வீரர்கள் பட்டிதார் 29 ரன்களும், லோம் ரோர் 33 ரன்களும் குவித்து ஆட்டம் இழந்து வெளியேறினார்கள். இதனால் பெங்களூர் அணி 19.4 ஓவர்களில் 153 ரன்கள் குவித்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் லக்னோ அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூர் அணியை வீழ்த்தியது.

லக்னோ அணியின் முக்கிய வேகப்பந்து வீச்சாளர் ஆன மயங்க யாதவ் சிறப்பாக பந்து வீசி நான்கு ஓவர்களில் 14 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதுவரை நான்கு போட்டிகளில் விளையாடியுள்ள பெங்களூரு அணி ஒரே ஒரு போட்டியில் மட்டும் வெற்றி பெற்று மூன்று போட்டிகளில் தோல்வி அடைந்து தற்போது புள்ளி பட்டியலில் ஒன்பதாவது இடத்தில் நீடிக்கிறது.

- Advertisement -

கடந்த மூன்று போட்டிகளில் பந்துவீச்சில் சொதப்பிய அல்சாரி ஜோசப் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக டாப்ளி களம் இறங்கினார். அவரும் நான்கு ஓவர்களில் 39 ரன்கள் விட்டுக் கொடுத்தது பெங்களூர் அணிக்கு பின்னடைவாக அமைந்தது. இதனால் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டிலும் சொதப்பி வரும் பெங்களூர் அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக எவை பார்க்கப்படுகிறது என்று சிஎஸ்கே முன்னாள் வீரர் அம்பத்தி ராயுடுவிடம் கேட்கப்பட்டது.

16 ஆண்டுகளாக கோப்பையை ஜெயிக்காத ஆர்சிபி

இதுகுறித்து அம்பதி ராயுடு கூறும் பொழுது “அவர்கள் பந்துவீச்சில் எப்பொழுதும் அதிக ரன்கள் தருவதாகவும், பேட்டிங்கில் தேவையான ரண்களுக்கு குறைவாக எடுப்பதாகவும் நான் உணர்கிறேன். ஆர்சிபி அணி அழுத்தத்தில் இருக்கும் பொழுது அவர்கள் அணியின் பெரிய பேட்ஸ்மேன்கள் யாரும் சிறப்பாக விளையாடுவதை பார்க்க முடியாது. அப்படியான அணிகள் எப்பொழுதும் வெல்ல முடியாது. இதனால்தான் ஆர்சிபி பல ஆண்டுகளாக வெல்லவில்லை.

இதையும் படிங்க: என்ன இத்தனை கோடியா?.. சிஎஸ்கே ஆர்சிபி முதல் போட்டி.. டிவி ஆன்லைனில் மலைக்க வைக்கும் சாதனை

அணியில் உள்ள எல்லா இளம் வீரர்களும் கீழே வந்து விளையாடுகிறார்கள். அணியில் உள்ள பெரிய வீரர்கள் எல்லோரும் மேலே சென்று கிரீம் கேக் சாப்பிட்டுவிட்டு அவுட் ஆகி சென்று விடுகிறார்கள். ஆர்சிபி அணிக்கு கடைசி கட்டத்தில் அழுத்தத்தில் விளையாட கூடிய வீரர்களாக யார் இருக்கிறார்கள் என்று பார்த்தால், இளம் வீரரான அனுஜ் ராவத் பிறகு தினேஷ் கார்த்திக். ஆர்சிபி அணியில் இருக்கக்கூடிய பெரிய பேட்ஸ்மேன்கள்தான் அழுத்தத்தை எடுத்துக் கொள்ள வேண்டும். ஆனால் அவர்கள் எங்கே இருந்தார்கள்? அவர்கள் எல்லோரும் ஆட்டம் இழந்து டிரெஸ்ஸிங் ரூமில் இருந்தார்கள். இது இன்று மட்டும் நடக்கவில்லை. பதினாறு ஆண்டுகளாக ஆர்சிபி அணியின் கதை இதுதான்” எனக் கூறியிருக்கிறார்.

- Advertisement -