தமிழ்ப் பாடல்கள் பாடி அசத்தும் பாகிஸ்தான் வீரர் – வீடியோ இணைப்பு!

0
3645
PCB

அசம் கான் 24 வயதான இந்த விக்கெட் கீப்பிங் பாகிஸ்தான் வலது கை பேட்ஸ்மேன் பாகிஸ்தான் அணிக்காக கடந்த ஆண்டு ஜூலை மாதம் அறிமுகமானார்.

இவரை மிக எளிதாக அறிமுகப்படுத்துவது என்றால், இவரது தந்தையும் இவரைப்போலவே பாகிஸ்தான் அணிக்காக பிரபல விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேனனாக இருந்தவர். அவர் பழைய கிரிக்கெட் ரசிகர்களுக்கு எல்லோருக்கும் தெரிந்த மொயின் கான்.

அசம் கான் நல்ல அதிரடியான பேட்டிங் செய்யக்கூடிய விக்கெட் கீப்பர். இவரது அனாசயமான அதிரடி பேட்டிங்கை பார்த்து இவருக்கு கடந்த ஆண்டு ஜூலை மாதம் இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 போட்டியில் பாகிஸ்தான் அணியில் இடம் கிடைத்தது. அதே சமயத்தில் அதே ஆண்டு அதே மாதம் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக நடந்த டி20 தொடரோடு இவருக்கான வாய்ப்பு முடிந்து போனது.

இவர் வெஸ்ட் இண்டீஸ் உள்நாட்டு டி20 லீக் கரீபியன் லீக் தொடரில் பார்படாஸ் ராயல்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். இந்த அணியின் உரிமையாளர்கள் ஐபிஎல் தொடரின் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் உரிமையாளர்கள் ஆவார்கள்.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு உடற்பயிற்சி நிபுணராக இருக்கக் கூடியவர் ராஜாமணி. இவர் நமது தமிழக வீரர் அஸ்வினுக்கு மிகவும் நெருக்கமானவர். இவர் பார்படோஸ் ராயல்ஸ் அணிக்கும் உடற்பயிற்சி நிபுணராக பணியாற்றி வருகிறார். அங்கு அசம்கான் உடன் இவருக்கு நல்ல நட்பு ஏற்பட, இவர் அவருக்கு தமிழ் பாடல்களை அறிமுகப்படுத்த, அதை அசம் கான் மிகவும் சிறப்பாக ஞாபகம் வைத்திருப்பதோடு பாடவும் செய்கிறார். தற்போது அவர் பாடி ஒரு வீடியோ பார்படோஸ் ராயல்ஸ் அணியால் வெளியிடப்பட்டிருக்கிறது. அந்த வீடியோ லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது!