சிறந்த பினிஷர் நானா? தோனியா?.. இப்ப ஆன்சர் சொல்றேன்..! – அசத்தல் பதில் சொன்ன ஏபி.டிவில்லியர்ஸ்!

0
2280
Dhoni

கிரிக்கெட் விளையாட்டில் ஒரு அணியை விட மற்றொரு அணி ஒரு ரன் கூடுதலாக எடுத்தால் வெற்றி, குறைவாக எடுத்தால் தோல்வி. வெற்றிக்கும் தோல்விக்குமான இடைவெளி இவ்வளவுதான்.

இந்தக் காரணத்தினால் ஒரு போட்டியை எடுத்துச் சென்று முடித்துக் கொடுக்கக்கூடிய வீரர்களுக்கு எல்லா அணியிலும் இடம் இருக்கிறது. அதில் சிறந்த வீரர்களுக்கு எல்லா அணியிலும் மதிப்பு இருக்கிறது.

- Advertisement -

துவக்க வீரர்கள், நடுவரிசை வீரர்கள் என்பது போல, கிரிக்கெட் நவீனம் அடைந்த காலத்தில், ஆட்டத்தை முடித்து வைப்பதற்கு என்று பழக்கப்பட்ட பயிற்சி பெறுகின்ற வீரர்கள் கொண்டுவரப்பட்டார்கள்.

சில அணிகளில் சில வீரர்கள் தாமாகத் தங்களை நல்ல பினிஷர்களாக உருவாக்கிக் கொண்டு, அந்தப் பொறுப்பை தாமாக வந்து ஏற்றுக் கொண்டார்கள்.

ஃபினிஷர் பொறுப்பு என்பது மிகவும் சிக்கலான ஒன்று. ஏனென்றால் ஆட்டத்தின் வெற்றி தோல்வி என்பது பேட்டிங் செய்கையில் அவர்களது கைகளில்தான் இருக்கிறது. இந்த காரணத்தினால் அவர்கள் எல்லா நேரத்திலும் சிறப்பாக செயல்பட்டாக வேண்டும்.

- Advertisement -

மற்றவர்கள் சிறப்பாகச் செயல்படாத போதும், இவர்கள் வெற்றிக்கு அருகில் அணியை அழைத்து வந்து ஆட்டம் இழந்தால், இவர்கள்தான் அதிக விமர்சனத்திற்கு உள்ளாக வேண்டிய இடத்தில் இருப்பார்கள்.

இந்த நிலையில் ஒட்டுமொத்த கிரிக்கெட்டில் மிகச்சிறந்த பினிஷராக மகேந்திர சிங் தோனி பார்க்கப்படுகிறார். அதே சமயத்தில் அந்த இடத்தில் அபாயகரமான வீரராக ஏபி.டிவில்லியர்ஸ் கூறப்படுகிறார்.

இப்படி இருக்க இது குறித்து அவரிடமே கேட்ட பொழுது, அதற்கு பதில் அளித்து பேசிய ஏபி டிவில்லியர்ஸ் “சிறந்த ஃபினிஷர் யார் என்பதில் எப்பொழுதும் பெரிய விவாதம் உள்ளது. நானா? இல்லை மகேந்திர சிங் தோனியா? என்று இருக்கிறது. அதை இப்பொழுது தீர்த்துக் கொள்ளலாம்.

மகேந்திர சிங் தோனிதான் மிகச்சிறந்த ஃபினிஷர் என்று நான் சொல்லுகிறேன். அவரைச் சொல்லுவதற்கு நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். டி20 மற்றும் ஐபிஎல் மற்றும் இந்தியா என எல்லா வகையான கிரிக்கெட்டிலும் அவர் சிறந்த பினிஷர் ஆக இருந்திருக்கிறார்.

அவர் விளையாடுவதைப் பார்ப்பதற்கு எனக்கு மிகவும் பிடிக்கும். அவர் கலந்த காலத்தில் செய்த விஷயங்கள், குறிப்பாக 2011 ஆம் ஆண்டு உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் நேராக அடித்த அந்த சிக்ஸர். இதெல்லாம் என் மனதில் எப்பொழுதும் நிலைத்து இருக்கும். இதை அவர் பலமுறை எல்லா வகையான கிரிக்கெட் வடிவத்திலும் செய்திருக்கிறார். அவர் அற்புதமான வீரர். அற்புதமான மனிதர். அவர் உலகில் எல்லா கிரிக்கெட் வீரர்களுக்கும் ஒரு முன்மாதிரி!” என்று கூறி இருக்கிறார்!