“நான் அதிர்ஷ்டம் இல்லாத கிரிக்கெட்டரா.. முதல்ல ரோகித்தான்..!” – மௌனம் கலைத்த சஞ்சு சாம்சன்!

0
10231
Sanju

நடந்து முடிந்த ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடருக்கு முன்பாக, இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணம் செய்திருந்தது.

அப்பொழுது இந்திய அணியின் மிடில் ஆர்டரில் விளையாடக்கூடிய கே எல் ராகுல் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் இருவரும் காயத்தால் இடம் பெறுவார்களா இல்லையா என்று தெரியாத நிலை இருந்தது.

- Advertisement -

இந்த நிலையில் இரண்டாவது விக்கெட் கீப்பருக்கான இடத்தில் சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டு பரிசோதிக்கப்பட்டது. அவர் தனக்கு வழங்கப்பட்ட வாய்ப்பை ஓரளவுக்கு பயன்படுத்த செய்தார்.

ஆனாலும் கே எல் ராகுல் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் இருவருக்கும் காயம் கடைசி வரை குணமாகும் வரை பொறுத்து இருந்து இந்திய கிரிக்கெட் வாரியம் அவர்களிடமே சென்றது. சஞ்சு சாம்சனை கழட்டி விட்டது.

இந்த நிலையில் உலகக் கோப்பை முடிந்த தற்பொழுது ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கும் சஞ்சு சாம்சன் தேர்வு செய்யப்படவில்லை.

- Advertisement -

இந்தியாவில் உலகக்கோப்பை நடந்த பொழுது உள்நாட்டு டி20 தொடரான சையத் முஸ்டாக் அலி தொடரும் நடந்தது. இந்த தொடரில் கேரளா அனிக்காக ஆறு போட்டுகளில் விளையாடிய சஞ்சு சாம்சன் வெறும் 138 ரன்கள் மட்டுமே எடுத்தார். ஐநூறு ரண்களுக்கு மேல் எடுத்த ரியான் பராக் மற்றும் 400 ரன்களுக்கு மேல் எடுத்த அபிஷேக் சர்மா ஆகியோருக்கு கூட வாய்ப்பு தரப்படவில்லை.

எனவே தற்பொழுது டி20 தொடருக்கு சஞ்சு சாம்சனை தேர்வு செய்யாதது குறித்து பிசிசிஐ விளக்கம் கூடியிருந்தது. எனவே ஏறக்குறைய சஞ்சு சாம்சனின் சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கை மங்கலாக ஆரம்பித்து விட்டதாகவே தெரிகிறது.

இந்த நிலையில் தன் கிரிக்கெட் வாழ்க்கை பற்றி பேசி உள்ள சஞ்சீவ் சாம்சன் கூறும்பொழுது ” என்னிடம் வந்து பேசிய முதல் இல்லை இரண்டாவது நபராக ரோஹித் சர்மாதான் இருப்பார். ஐபிஎல் தொடரில் நான் மிகச் சிறப்பாக விளையாடியதாக அவர் என்னை வந்து பேசி பாராட்டினார். மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக நிறைய சிக்ஸர்கள் நான் அடித்து விட்டதாக கூறினார். என்னுடைய பேட்டிங் சிறப்பாக இருந்ததாக தெரிவித்தார். எனக்கு அவர் எப்பொழுதும் அதிக ஆதரவு கொடுத்தார்.

கிரிக்கெட்டில் நான் அதிகம் அதிர்ஷ்டம் இல்லாதவன் என்று மக்கள் பேசுகிறார்கள். ஆனால் நான் தேவையானதை அடைந்து விட்டேன். நான் என்ன நினைத்தேனோ அதைவிட அதிகமாகவே எனக்கு கிடைத்திருக்கிறது!” என்று மிகப் பெருந்தன்மையாக கூறியிருக்கிறார்.