கடுமையா சொல்ல போறேன்.. தோனிக்கு அடுத்து கேப்டனா கோலி ரோஹித் சரியான செலக்சனா? – அக்தர் தடாலடி பதில்!

0
438
Akthar

13 வது ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பையை இந்தியா நடத்துகிறது. இந்த உலகக் கோப்பைக்கான எல்லா ஏற்பாடுகளும் தற்பொழுது தயார் நிலையில் இருக்கிறது!

ஆனால் உலகக் கோப்பை தொடரில் பங்கு பெறுவதற்கான இந்திய அணி தயார் நிலையில் இருக்கிறதா என்றால் இல்லை என்பதுதான் பதில். இந்திய அணி இன்றுமே பரிசோதனை முயற்சியில்தான் இருக்கிறது.

- Advertisement -

உலகக் கோப்பைக்கு முன்பாக இந்திய அணிக்கு இருக்கும் ஒரு நாள் தொடர்களான ஆசியக் கோப்பை மற்றும் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் என கடைசி வரை இந்திய அணி பரிசோதனை முயற்சியில் ஈடுபட வேண்டிய கட்டாய சூழல் நிலவுகிறது!

ஒருநாள் உலகக் கோப்பையை மனதில் வைத்து சில வீரர்களுக்கு சில ரோல் கொடுத்து இந்திய அணி நிர்வாகம் தயார்படுத்தி வந்தது. அப்படியான முக்கிய வீரர்களில் பலர் ஒரே நேரத்தில் காயத்தில் சிக்கியது இந்திய அணி நிர்வாகத்திற்கு பெரிய தலைவலியை உண்டாக்கி இருக்கிறது. இதன் காரணமாக இந்திய அணி நிர்வாகத்தால் உலகக் கோப்பைக்கான இந்திய அணியைத் தேர்வு செய்வதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது.

மேலும் இந்திய அணி மகேந்திர சிங் தோனியின் தலைமைக்கு கீழ் இறுதியாக 2011ம் ஆண்டு உலகக் கோப்பையை வென்றதே கடைசியாக இருக்கிறது. இதுவரை உலக கோப்பையை வென்ற கேப்டன்களாக கபில்தேவ் மற்றும் மகேந்திர சிங் தோனி இருவர் மட்டும்தான் இருக்கிறார்கள். இதனால் தற்போதைய அணி நிர்வாகம் மற்றும் கேப்டன் மீதும் பெரிய நெருக்கடி இருக்கிறது.

- Advertisement -

இதுகுறித்து பேசியுள்ள பாகிஸ்தான் அணியின் நட்சத்திர முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் அக்தர் கூறும் பொழுது ” ஒரு காலத்தில் அணியின் ஒட்டுமொத்த அழுத்தத்தையும் தனியாக சுமக்கும் ஒரு வீரர் இருந்தார். அவர்தான் மகேந்திர சிங் தோனி. ஒரு கேப்டனால் ஒட்டுமொத்த அணியையும் தனக்கு பின்னால் வைத்து காக்க முடியும்.

ரோகித் சர்மா சிறந்த வீரர்தான். ஆனால் அவர் கேப்டனாக இருக்கும்போது முடங்குகிறார். பீதி அடைகிறார். இது கடுமையான வார்த்தைகள்தான் ஆனால் அவர் கேப்டன் பதவியை ஏற்று இருக்க வேண்டும், கேப்டன் பதவிக்கு அவர் ஏற்றவர் என்று நான் நினைக்கவில்லை

விராட் கோலி கூட மகேந்திர சிங் தோனி போல திறமையானவர் கிடையாது. அவர் பேட்டிங்கில் வைத்திருக்கக் கூடிய டைமிங்கும் அவரிடம் இருக்கும் ஷாட்களும் அவர் ஒரு கிளாசிக் பேட்ஸ்மேன். ஆனால் அவர் ஒரு கேப்டனுக்காக உருவாக்கப்பட்டாரா? இதுகுறித்து பெரும்பாலும் நான் என்னையே கேள்வி எழுப்பி கொள்கிறேன். நெருக்கடியான சூழ்நிலைகளில் அவர் நன்றாக ரியாக்ட் செய்தாரா? இது குறித்து விராட் கோலி கேள்வி கேட்டுக்கொள்ள வேண்டும்!” என்று கூறி இருக்கிறார்!