4 பேர்.. அதுல 4வது இடம்தான் விராட் கோலிக்கு தருவேன்.. ஆதாரம் இருக்கு – ஸ்டார்க் மனைவி பேட்டி

0
119
Virat

தற்கால கிரிக்கெட்டில் சிறந்த நான்கு பேட்ஸ்மேன்களாக குறிப்பிடப்படுபவர்களில் நான்காவது இடத்தையே விராட் கோலிக்கு தருவேன் என ஆஸ்திரேலியா பெண்கள் அணியின் கேப்டனும் ஆஸ்திரேலியா வீரர் மிட்சல் ஸ்டார்க்கின் மனைவியுமான அலேசா ஹீலி கூறியிருக்கிறார்.

இதுகுறித்து அவர் பேசி இருப்பதில் விராட் கோலிக்கு உதவி செய்வதற்கு அதிக ஆட்கள் இருப்பதாகவும், அதன் அடிப்படையில் அவருடைய எண்களை வைத்து பார்க்கும் பொழுது அவருக்கு நான்கு சிறந்த வீரர்களில் நான்காவது இடத்தையே கொடுக்க முடியும் என்றும் கூறியிருக்கிறார்.

- Advertisement -

நான்கு சிறந்த பேட்ஸ்மேன்கள்

சர்வதேச கிரிக்கெட்டில் இந்த காலகட்டத்தில் இந்தியாவின் விராட் கோலி, ஆஸ்திரேலியாவின் ஸ்டீவன் ஸ்மித், இங்கிலாந்தின் ஜோ ரூட் மற்றும் நியூசிலாந்தின் கேன் வில்லியம்சன் ஆகிய நான்கு பேட்ஸ்மேன்கள் இருக்கிறார்கள்.

இதில் விராட் கோலி மட்டுமே மூன்று வடிவ கிரிக்கெட்டிலும் சிறப்பான செயல்பாட்டை கொண்டு இருக்க பேட்ஸ்மேனாக இருக்கிறார். மற்றும் மூவரும் ஒரு வடிவத்தில் மட்டுமே சிறந்த பேட்ஸ்மேன்களாக இருக்கிறார்கள். இருந்த போதிலும் அலேசா ஹீலி இவ்வாறு கூறியிருப்பது ஆச்சரியத்தை உண்டாக்கியிருக்கிறது.

- Advertisement -

விராட் கோலிக்கு நான்காவது இடம்

இதுகுறித்து அலேசா ஹீலி கூறும் பொழுது ” கேன் வில்லியம்சன் மொத்தம் நியூசிலாந்து அணியையும் முழுமையாக சுமந்திருக்கிறார். ஆனால் விராட் கோலியை எடுத்துக் கொள்ளும் பொழுது அவருக்கு ஏதாவது ஒரு ஆதரவு அணியில் இருந்து கொண்டே இருந்திருக்கிறது. விராட் கோலிதான் தலைசிறந்த வீரர் என்பதில் சந்தேகம் இல்லை. அது உண்மையாகவே இருக்கட்டும்.

விராட் கோலி ரன்கள் அடிக்கவில்லை என்றால் ரோகித் சர்மா அடிப்பார் இல்லையென்றால் கே.எல்.ராகுல் வந்து அடிப்பார், அவரும் இல்லையென்றால் எட்டாவது இடத்தில் வருகின்ற ரவீந்திர ஜடேஜா கூட சதம் அடிப்பார். ஆனால் கேன் வில்லியம்சன் ரன்கள் எடுக்கவில்லை என்றால் நியூசிலாந்து அணிக்கு அப்படி யாருமே இருக்கவில்லை. அவர் சிறப்பாக விளையாடாவிட்டால் அந்த அணி தோல்விதான் அடையும்.

இதையும் படிங்க : மீண்டும் ஹெட் கோச் ஆனார் ராகுல் டிராவிட்.. 2025 ஐபிஎல் தொடரில் களம் இறங்குகிறார்.. எந்த அணிக்கு தெரியுமா?

எனவே விராட் கோலி விஷயத்தில் நான் பகுப்பாய்வு செய்கிறேன். அவர் எத்தனை போட்டிகளில் விளையாடுகிறார் என்று பார்க்கிறேன். இந்த எண்களின் அடிப்படையில் வைத்து பார்க்கும் பொழுது அவருக்கு தலை சிறந்த நான்கு பேட்ஸ்மேன்களில் நான்காவது இடத்தையே நான் கொடுப்பேன். மற்றபடி அவர் சிறந்த வீரர் என்பதில் எந்த சந்தேகமும் கிடையாது” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -