டேவான் கான்வே தேர்வு செய்த ஆல் டைம் சிஎஸ்கே XI: ட்வைன் பிராவோ மற்றும் மேத்யூ ஹைடனுக்கு இடமில்லை

0
1219

நடந்து முடிந்த ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐந்தாவது முறையாக சாம்பியன் பட்டம் பெற்று சாதனை படைத்திருக்கிறது . இதற்கு முன்பு மும்பை இந்தியன்ஸ் அணி ஐந்து முறை சாம்பியன் பட்டம் வென்றது குறிப்பிடத்தக்கது .

ஆனால் சிஎஸ்கே அணி அவர்களை விட இரண்டு சீசன்கள் குறைவாக ஆடி ஐந்து வெற்றிகளை பெற்று புதிய சாதனை படைத்தது . சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக இந்த வருடம் ருத்ராஜ் கெய்க்வாட் மற்றும் டேவான் கான்வே ஆகியோர் இந்தத் தொடரில் சிறப்பான பங்களிப்பை அளித்தனர் .

- Advertisement -

கடந்த சீசன் மற்றும் இந்த சீசனிலும் டேவான் கான்வே சிஎஸ்கே அணிக்காக சிறப்பான துவக்கத்தை வழங்கி வருகிறார் . இந்த வருட ஐபிஎல் போட்டிகளில் மட்டும் பதினாறு போட்டிகளில் ஆடி இருக்கும் அவர் 672 ரன்களை எடுத்திருக்கிறார். ஆறு அரை சதங்கள் அடங்கும் . இந்த வருட ஐபிஎல் தொடரில் அதிக ரன்களை எடுத்தவர்கள் பட்டியலில் மூன்றாவது இடத்திலும் இருக்கிறார் டெவான் கான்வே .

ஒவ்வொரு வீரர்களும் தங்களது சிறந்த ஐபிஎல் அணியை தேர்வு செய்து வெளியிட்டு வருகின்றனர் . அதேபோன்று டேவான் தான் வேயும் தனது ஆல் டைம் சிறந்த சிஎஸ்கே அணியை தேர்வு செய்து இருக்கிறார். ஆனாலும் அவர் அந்த அணியில் தனது பெயரை குறிப்பிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது .

டேவான் கான்வே தேர்ந்தெடுத்த ஆல் டைம் பெஸ்ட் சிஎஸ்கே 11:

- Advertisement -
  1. ருத்ராஜ் கெய்க்வாட்
  2. பாப் டுப்பிளசிஸ்
  3. சுரேஷ் ரெய்னா
  4. அம்பத்தி ராயுடு
    5, பென் ஸ்டோக்ஸ்
  5. மொயின் அலி
  6. ரவீந்திர ஜடேஜா
  7. எம்எஸ்.தோனி
  8. அல்பி மோர்க்கல்
  9. தீபக் சகார்
  10. லட்சுமிபதி பாலாஜி இந்த வீரர்களைக் கொண்ட அணியை தனது ஆல் டைம் சிறந்த சிஎஸ்கே அணியாக தேர்வு செய்து இருக்கிறார் டேவான் கான்வே. இந்த அணியில் சிஎஸ்கே அணிக்காக அதிக விக்கெட் வீழ்த்திய வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஆல் ரவுண்டரும் சிஎஸ்கே அணியின் முன்னாள் ரவுண்டரும் தற்போதைய பந்து வீச்சு பயிற்சியாளருமான ட்வைன் பிராவோவின் பெயர் இடம்பெறவில்லை . மேலும் அந்த அணிக்கு துவக்க சீசன்களில் சிறப்பாக ஆடிய ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் துவக்க வீரர் மேத்யூ ஹைடன் பெயரும் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.