நடந்து முடிந்த ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐந்தாவது முறையாக சாம்பியன் பட்டம் பெற்று சாதனை படைத்திருக்கிறது . இதற்கு முன்பு மும்பை இந்தியன்ஸ் அணி ஐந்து முறை சாம்பியன் பட்டம் வென்றது குறிப்பிடத்தக்கது .
ஆனால் சிஎஸ்கே அணி அவர்களை விட இரண்டு சீசன்கள் குறைவாக ஆடி ஐந்து வெற்றிகளை பெற்று புதிய சாதனை படைத்தது . சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக இந்த வருடம் ருத்ராஜ் கெய்க்வாட் மற்றும் டேவான் கான்வே ஆகியோர் இந்தத் தொடரில் சிறப்பான பங்களிப்பை அளித்தனர் .
கடந்த சீசன் மற்றும் இந்த சீசனிலும் டேவான் கான்வே சிஎஸ்கே அணிக்காக சிறப்பான துவக்கத்தை வழங்கி வருகிறார் . இந்த வருட ஐபிஎல் போட்டிகளில் மட்டும் பதினாறு போட்டிகளில் ஆடி இருக்கும் அவர் 672 ரன்களை எடுத்திருக்கிறார். ஆறு அரை சதங்கள் அடங்கும் . இந்த வருட ஐபிஎல் தொடரில் அதிக ரன்களை எடுத்தவர்கள் பட்டியலில் மூன்றாவது இடத்திலும் இருக்கிறார் டெவான் கான்வே .
ஒவ்வொரு வீரர்களும் தங்களது சிறந்த ஐபிஎல் அணியை தேர்வு செய்து வெளியிட்டு வருகின்றனர் . அதேபோன்று டேவான் தான் வேயும் தனது ஆல் டைம் சிறந்த சிஎஸ்கே அணியை தேர்வு செய்து இருக்கிறார். ஆனாலும் அவர் அந்த அணியில் தனது பெயரை குறிப்பிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது .
டேவான் கான்வே தேர்ந்தெடுத்த ஆல் டைம் பெஸ்ட் சிஎஸ்கே 11: