15 வருடம்.. ஜெய்ஸ்வால் கில் ரோகித் அரிய சாதனை.. இந்திய கிரிக்கெட்டில் இரண்டே முறை நடந்த நிகழ்வு

0
395
Rohit

மார்ச் 8. இங்கிலாந்து அணிக்கு எதிரான இந்தியாவின் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், ஆரம்பத்தில் இருந்தே விராட் கோலி கிடைக்கவில்லை. மேலும் அவரது இடத்தில் முதல் டெஸ்ட் போட்டியில் சிறப்பாக விளையாடிய கேஎல் ராகுல் அதற்கு அடுத்த நான்கு போட்டிகளும் விளையாடவில்லை.

மேலும் நடைபெற்றுக் கொண்டிருக்கும் டெஸ்ட் தொடர் முடிந்து, இரண்டு மாத காலம் ஐபிஎல் அதற்கு அடுத்து டி20 உலக கோப்பை என இருக்கின்ற காரணத்தினால், இந்திய வேகப்பந்துவீச்சாளர்களுக்கு ஓய்வு தேவைப்பட்ட நிலையில், முகமத் சமி காயம் காரணமாக இந்திய அணியில் இடம் பெறவில்லை. இதனால் சிராஜ் மற்றும் பும்ராவுக்கு ஓய்வு கொடுப்பதில் சிரமங்கள் ஏற்பட்டது.

- Advertisement -

இப்படியான சூழ்நிலையில் இந்திய அணி நிர்வாகம் இளம் வீரர்களை நம்பி இந்தத் தொடரில் களம் இறங்கி தொடரை கைப்பற்றி சாதித்திருக்கிறது. இந்த தொடரில் வாய்ப்பு பெற்ற ஐந்து அறிமுக வீரர்களில் ரஜத் பட்டிதார் தவிர மற்ற நான்கு வீரர்களும் மிகச் சிறப்பாக விளையாடி நம்பிக்கை அளித்து இருக்கிறார்கள்.

இந்த தொடரில் இந்திய அணியின் இளம் இடது கை துவக்க ஆட்டக்காரர் ஜெய்ஸ்வால் இரண்டாவது மற்றும் மூன்றாவது டெஸ்டில் தொடர்ச்சியாக இரண்டு இரட்டை சதங்கள் அடித்து, ஒரு டெஸ்ட் தொடரில் இரண்டு இரட்டை சதங்கள் அடித்த இந்திய வீரர்கள் பட்டியலில் விராட் கோலி மற்றும் வினோத் காம்ப்ளிக்கு அடுத்து இணைந்தார்.

மேலும் இந்த தொடரின் இரண்டாவது போட்டியில் இரண்டாவது இன்னிங்ஸில் சரியாக விளையாடாமல் இருந்தால், இந்திய அணியை விட்டு நீக்க வாய்ப்பு இருந்த சுப்மன் கில் அந்த இன்னிங்ஸில் சதம் அடித்தது தனது இடத்தை உறுதி செய்தார். மேலும் அதற்கடுத்து 90 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்து இருந்தால். இந்த நிலையில் இந்தத் தொடரில் இன்று இரண்டாவது சதத்தை அடித்திருக்கிறார்.

- Advertisement -

இதேபோல் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 30 ரன்கள் எடுத்து 3 விக்கெட் இழந்து இருந்த பொழுது இந்திய கேப்டன் ரோஹித் சர்மா நெருக்கடியில் இருந்து சதம் அடித்து இந்திய அணியை காப்பாற்றினார். மேலும் இந்தத் தொடரில் இன்று கடைசி டெஸ்ட் போட்டியில் சதம் அடித்திருக்கிறார்.

இந்த வகையில் இந்திய டாப் ஆர்டர் முதல் மூன்று பேட்ஸ்மேன்களும் இந்தத் தொடரில் குறைந்தபட்சம் இரண்டு சதங்கள் அடித்து இருக்கிறார்கள். இதற்கு முன்பு இலங்கைக்கு எதிராக 2009 ஆம் ஆண்டு கம்பீர், சேவாக் மற்றும் டிராவிட் ஆகியோர் ஒரு தொடரில் மூவரும் இரண்டு சதங்கள் அடித்து இருந்தார்கள். மீண்டும் 15 வருடம் கழித்து இந்த மூவரும் இந்த அரிய நிகழ்வை செய்திருக்கிறார்கள்.

இதையும் படிங்க : “சிஎஸ்கே டீம் வீக்கா இருந்தாலும்.. அவர் ஒருத்தர் இருந்தா போதும் ஜெயிக்கலாம்” – மொயின் அலி பேட்டி

மேலும் டாப் ஆர்டர்கள் மூவரும் ஒரே தொடரில் நானூறு ரன்களுக்கு மேல் குவித்தது இந்திய கிரிக்கெட்டில் 6வது முறையாக இந்த தொடரில் நடைபெற்றிருக்கிறது. கடைசியாக 2003 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக டிராவிட், சேவாக் மற்றும் லட்சுமணன் 400 ரன்கள் கடந்து எடுத்திருந்தார்கள்.