சிஎஸ்கே அடுத்து விளையாடும் அணிகள் எல்லாம் ஃபார்முக்கு வரும் துயரம் ; ஹைதராபாத்தை வீழ்த்தியது கொல்கத்தா!

0
1129
Ipl2023

ஐபிஎல் தொடரில் இன்று ஹைதராபாத் ராஜீவ் காந்தி மைதானத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதிக்கொண்ட மிகவும் பரபரப்பான போட்டியில் ஐந்து ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத்தை வீழ்த்தியது கொல்கத்தா!

முதலில் டாஸ் வென்று பேட்டிங் செய்த கொல்கத்தா அணிக்கு குர்பாஸ் 0, ஜேசன் ராய் 20, வெங்கடேஷ் 8, நிதிஷ் ராணா 42, ரிங்கு சிங் 46, ரசல் 24, சுனில் நரைன் 1, சர்துல் தாக்கூர் 8, ஹர்ஷித் ராணா 0, வைபவ் அரோரா 2, அனுகுல் ராய் 13 என ரன்கள் எடுக்க 20 ஓவர்களில் ஒன்பது விக்கெட்டுகள் இழப்புக்கு 171 ரன்கள் வந்தது. ஹைதராபாத் தரப்பில் நடராஜன் 4 ஓவர்கள் பந்துவீசி 30 ரன்கள் தந்து இரண்டு விக்கட்டுகள் வீழ்த்தினார்.

- Advertisement -

தொடர்ந்து விளையாடிய ஹைதராபாத் அணிக்கு அபிஷேக் ஷர்மா 9, மயான்க் அகர்வால் 18, ராகுல் திரிவாதி 20, ஹாரி புரூக் 0, ஹென்றி கிளாசன் 36 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்கள்.

இன்னொரு முனையில் கேப்டன் எய்டன் மார்க்ரம் அப்துல் சமாதை வைத்துக் கொண்டு அணியை வெற்றியை நோக்கி கொண்டு சென்றார். ஆனால் வைபவ் அரோரா வீசிய 17ஆவது ஓவரில் ஒரு மெதுவான பந்துக்கு அடிக்க போய் விக்கட்டை கொடுத்து 41 ரன்களில் வெளியேறினார். இங்கிருந்து ஆட்டம் கொல்கத்தா பக்கம் மாறியது.

மூன்று ஓவர்களுக்கு 27 ரன்கள் வெற்றிக்கு தேவைப்பட்ட நிலையில் யான்சன் மற்றும் அப்துல் சமாத் இருவரும் களத்தில் இருந்தார்கள். வருண் சக்கரவர்த்தி வீசிய 18 வது ஓவரில் 5 ரன்கள் வந்தது.

- Advertisement -

இதற்கு அடுத்து வைபவ் அரோரா வீசிய 19ஆவது ஓவரில் 13 ரன்கள் வர கடைசி ஓவரில் வெற்றிக்கு ஒன்பது ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது. கடைசி ஓவரை வீசிய வருண் சக்கரவர்த்தி மிகச் சிறப்பாக பந்து வீசி அப்துல் சமாத் விக்கட்டை வீழ்த்தி, ஐந்து ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணிக்கு நான்காவது வெற்றியை பெற்றுத் தந்தார். நான்கு ஓவர்கள் பந்து வீசிய அவர் 20 ரன்கள் மட்டுமே தந்து ஒரு விக்கெட் வீழ்த்தினார்.

சிஎஸ்கே அணி அடுத்த நான்கு ஆட்டங்களில் இரண்டு ஆட்டங்களை டெல்லிக்கு எதிராகவும், தலா ஒரு ஆட்டத்தை ஹைதராபாத் மற்றும் மும்பை அணிக்கு எதிராகவும் விளையாட இருக்கிறது.

இந்த நிலையில் டெல்லி அணியும் மும்பை அணியும் தோல்வியிலிருந்து வெற்றிப் பாதைக்கு திரும்பி சரியான அணியை கண்டுபிடித்து இருக்கிறார்கள். மேலும் ஹைதராபாத் அணியும் நல்ல அணியை கண்டுபிடித்து விட்டார்கள் என்றே சொல்ல வேண்டும். அவர்கள் ஹாரி புரூக்கை வெளியில் வைத்து நியூசிலாந்தின் அதிரடி பேட்ஸ்மேன் கிளன் பிலிப்சை கொண்டு வந்தால், அவர்களும் பலமான அணியாக மாறுவார்கள். இது தற்பொழுது சென்னை அணியின் பிளே ஆப் சுற்றுக்கு பெரிய பிரச்சினையாக மாறி உள்ளது!