112 ரன் பார்ட்னர்ஷிப்.. அஸ்வின் மேஜிக் அரைசதம்.. தகுதி சுற்றில் திண்டுக்கல்.. வெளியேறிய சேப்பாக்கம்.. டிஎன்பிஎல் 2024

0
503
Ashwin

தற்போது நடைபெற்று வரும் டிஎன்பிஎல் தொடரில் எலிமினேட்டர் சுற்றில் இன்று ரவிச்சந்திரன் அஸ்வினின் திண்டுக்கல் டிராகன்ஸ் மற்றும் பாபா அபராஜித்தின் சேப்பாக் சூப்பர் கில்லிஸ் அணியும் மோதிக்கொண்டன. இந்த போட்டியில் ரவிச்சந்திரன் அஸ்வினின் அபாரமான பேட்டிகளால் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி வெற்றி பெற்று இரண்டாவது தகுதி சுற்றுக்குள் நுழைந்தது.

இன்றைய போட்டிக்கான டாசில் வென்ற ரவிச்சந்திரன் அஸ்வின் முதலில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி பந்து வீசும் என அறிவித்தார். முதலில் பேட்டிங் செய்த சேப்பாக் சூப்பர் கில்லிஸ் அணியின் துவக்க ஆட்டக்கார சந்தோஷ் குமார் 5 பந்தில் 1 ரன் மட்டுமே எடுத்து ஆட்டம் இழந்தார்.

- Advertisement -

இதைத்தொடர்ந்து இன்னொரு தொடக்க ஆட்டக்காரர் மற்றும் விக்கெட் கீப்பர் நாராயணன் ஜெகதீசன் 16 பந்துகளில் 25 ரன்கள் எடுத்தார். பேட்டிங்கில் நான்காவது இடத்தில் வந்த பிரதோஷ் ரஞ்சன் பால் 19 பந்துகளில் 19 ரன்கள் எடுத்து வெளியேறினார். ஒரு மனையில் நிலைத்து நின்று விளையாடிய பாபா அபராஜித் சிறப்பாக விளையாடிய 54 பந்துகளில் 7 பவுண்டரிகள் மற்றும் 1 சிக்ஸர் உடன் 72 ரன்கள் குவித்தார். கடைசியில் அதிரடியாக அபிஷேக் தன்வார் ஆட்டம் இழக்காமல் 9 பந்தில் 22 ரன்கள் எடுத்தார்.

இறுதியாக 20 ஓவர்களில் சேப்பாக் சூப்பர் கில்லிஸ் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு158 ரன்கள் எடுத்தது. திண்டுக்கல் டிராகன்ஸ் அணியின் பந்துவீச்சு தரப்பில் சந்தீப் வாரியர் நான்கு ஓவர்களுக்கு 35 ரன்கள் தந்து இரண்டு விக்கெட் கைப்பற்றினார். வருண் சக்கரவர்த்தி நான்கு ஓவர்களுக்கு 32 ரன்கள் தந்து ஒரு விக்கெட் கைப்பற்றினார். ரவிச்சந்திரன் அஸ்வின் நான்கு ஓவர்களுக்கு 33 ரன்கள் தந்து விக்கெட் ஏதும் கைப்பற்றவில்லை.

- Advertisement -

இதைத்தொடர்ந்து இலக்கை நோக்கி களம் இறங்கிய திண்டுக்கல் டிராகன்ஸ் அணிக்கு தொடக்க ஆட்டக்காரர் விமல் குமார் 6 பந்துகளில் 3 ரன் எடுத்து வெளியேறினார். இதைத்தொடர்ந்து இந்த முறை கேப்டன் ரவிச்சந்திரன் அஸ்வின் மூன்றாவது இடத்தில் களம் இறங்கி தொடக்க ஆட்டக்காரர் சிவம் சிங் உடன் இணைந்து அபாரமான முறையில் விளையாடினார்.

முக்கியமான போட்டியில் சிறப்பாக விளையாடிய ரவிச்சந்திரன் அஸ்வின் அரை சதம் அடித்து 35 பந்துகளில் 4 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்கள் உடன் 55 ரன்கள் எடுத்தார். இரண்டாவது விக்கெட்டுக்கு சிவம் சிங் உடன் இணைந்து 72 பந்துகளில் 112 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தார். அடுத்து வந்த அதிரடி ஆட்டக்காரர் பாபா இந்திரஜித் ரன் ஏதும் எடுக்காமல் ரன் அவுட் ஆனார். இன்னொரு முனையில் சிறப்பாக விளையாடிய சிவம் சிங் 49 பந்துகளில் 64 ரன்கள், பூபதி குமார 3 பந்தில் 1 ரன் எடுத்து அடுத்தடுத்து வெளியேறினார்கள்.

இதையும் படிங்க : கம்பீர் எப்பவும் இதை மட்டும் செய்யவே மாட்டார்.. வீரர்களுக்கு வேற வழியில்ல – ஆஷிஷ் நெக்ரா கருத்து

இதனால் ஆட்டத்தில் கொஞ்சம் பரபரப்பு ஏற்பட்டது. திண்டுக்கல் டிராகன்ஸ் அணிக்கு கடைசி மூன்று ஓவர்களில் 18 பந்தில் 19 ரன்கள் வெற்றிக்கு தேவைப்பட்டது. இந்த நிலையில் கடைசி ஓவருக்கு வெற்றிக்கு 7 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், சி.சரத்குமார் 11 பந்தில் 12 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். அப்போது வெற்றிக்கு இரண்டு பந்தில் இரண்டு ரன்கள் தேவைப்பட்டது. உள்ளே வந்த தினேஷ் ராஜ் பவுண்டரி அடித்து திண்டுக்கல் டிராகன்ஸ் அணியை வெற்றி பெற வைத்தார். சேப்பாக் சூப்பர் கில்லிஸ் அணி வெளியேறியது. திண்டுக்கல் டிராகன்ஸ் அணி இரண்டாவது தகுதி சுற்றில் ஐட்ரீம் திருப்பூர் தமிழன்ஸ் அணியை எதிர்கொள்கிறது.

- Advertisement -