முன்பெல்லாம் இந்திய அணியில் இருப்பவர்கள் நண்பர்களாக இருந்தார்கள்; இப்போது உடன் வேலை பார்க்கிறவர்களாக மாறிவிட்டார்கள் – அஸ்வின் பகிர்ந்துகொண்ட திடுக்கிடும் உண்மை!

0
5333

“இந்திய அணியில் இருப்பவர்கள் நண்பர்களாக பழகினார்கள். ஆனால் இப்போது உடன் வேலை பார்க்கிறவர்களாக மட்டுமே மாறிவிட்டார்கள்.” என்கிறவாறு கூறியுள்ளார் ரவிச்சந்திரன் அஸ்வின்.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலில் இந்திய அணி தோல்வியை தழுவியது தற்போது பேசு பொருளாக மாறியுள்ளது. இந்த தோல்விக்காக ரோகித் சர்மா பொறுப்பேற்க வேண்டும், கேப்டன் பொறுப்பில் இருந்து விலக வேண்டும் என்கிற பல்வேறு காரணங்களும் அடுக்கடுக்காக முன்வைக்கப்பட்டு வருகின்றன.

- Advertisement -

குறிப்பாக ரோகித் சர்மா முதலில் பவுலிங் செய்கிறேன் என்று எடுத்த முடிவு மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் போன்ற வீரர் பிளேயிங் லெவனில் எடுக்கப்படாது. அடுத்ததாக மூன்றாவது மற்றும் நான்காவது நாளில் இந்திய பந்துவீச்சாளர்களை ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இரண்டாவது இன்னிங்சில் பயன்படுத்திய விதம் என அனைத்திற்கும் இந்த விமர்சனங்களை சந்தித்து வருகிறார் ரோகித் சர்மா.

ஆஸ்திரேலியா அணியிடம் இந்தியா தோல்வியை தழுவியபிறகு நாடு திரும்பிய ரவிச்சந்திரன் அஸ்வின், தனியார் பத்திரிக்கையில் அளித்த பேட்டியில் பல்வேறு விஷயங்களை பகிர்ந்து கொண்டார். அப்போது இந்திய அணிக்குள் தற்போது நிலவி வரும் கலாச்சாரம் கடந்த காலங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்டதாக இருக்கிறது என்று பேசியது மிகப்பெரிய பேசுபொருளாக மாறியிருக்கிறது.

“கடந்த காலங்களில் இந்திய அணியில் பழகியவர்கள் நண்பர்களாக பழகினார்கள். ஆனால் இப்போது இருப்பவர்கள் உடன் வேலைபார்க்கும் ஒருவரைப் போல மற்றொரு வீரர்களுடன் பழகி வருகிறார்கள். இரண்டிற்கும் மிகப்பெரிய வித்தியாசம் இருக்கிறது.

- Advertisement -

போட்டிகள் நடக்கையில் பொதுவாக அருகில் வந்து அமர்ந்து கொள்ளும் வீரர்கள், எப்படி இருக்கிறது? எப்படி அணுகப் போகிறாய்? எப்படியான மனநிலையில் இருக்கிறாய்? என்று பலவிதமாக பேசுவார்கள்! பழகுவார்கள்!. ஆனால் இப்போது இருப்பவர்களோ சாதாரணமாக பேசுவதையே விரும்பாமல் யாரோ போல இருக்கிறார்கள். இது ஒரு சாதாரண உதாரணம் தான். இன்னும் நிறைய நடக்கிறது.

இளம் வீரர்களிடம் இது போன்ற அணுகுமுறை இருந்திடக்கூடாது. ஏனெனில் அணியில் இருக்கும் அனைவரிடமும் பேச வேண்டும். அவர்களிடம் இருக்கும் நல்ல டெக்னிக் மற்றும் அனுபவங்களை பெற்றுக்கொள்ள வேண்டும். இது அடுத்தடுத்த வருடங்களில் போட்டியை அணுகுவதற்கும் பிட்ச் கண்டிஷனை பழகுவதற்கும் உதவும்.

இளம் வீரர்கள் போதுமானவரை அதிக நேரங்களை அனுபவமிக்க மூத்த வீரர்களிடம் பழகி, அவர்களிடமிருந்து நிறைய கற்றுக் கொள்ளும். முதிர்ச்சியான மனப்பாங்கை வளர்த்து கொண்டால் இது தனிப்பட்ட முறையில் மட்டுமல்ல இந்திய அணியின் எதிர்காலத்திற்கும் சாதகமானதாக இருக்கும். உதவும்.” என தனது பேட்டியில் அறிவுறுத்தியுள்ளார் ரவிச்சந்திரன் அஸ்வின்.