“எல்லா சாதனைக்கும் என் மாமா ஷாகித் அப்ரிடி கொடுக்குற டிப்ஸ்தான் காரணம்!” – மருமகன் ஷாகின் அப்ரிடி சுவாரசியமான பேச்சு!

0
1026
Shaheen

நேற்று கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் பங்களாதேஷ் அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில், தொடர் நான்கு தோல்விகளுக்கு பிறகு திரும்பி வந்த பாகிஸ்தான அணி வெற்றி பெற்றது.

நேற்றைய போட்டியில் பாகிஸ்தான் அணி பவர் பிளேவில் விக்கெட்டுகள் கைப்பற்றியது. அந்த அணியின் துவக்க பந்துவீச்சாளர் ஷாகின் அப்ரிடி மிகச் சிறப்பாக நேற்று பந்து வீசினார். பவர் பிளேவில் பாகிஸ்தான் விக்கெட்டுகளை பெரும்பொழுது அவர்கள் மிகவும் சிறப்பான செயல்பாட்டை கொண்டிருக்கும் அணியாக மாறுகிறார்கள்.

- Advertisement -

பங்களாதேஷ் அணி எட்டாம் இடம் வரைக்கும் முழுமையான பேட்ஸ்மேன்களை வைத்திருந்தும் கூட, பாகிஸ்தான் அணியின் சிறப்பான பந்துவீச்சின் முன்னால் அவர்களால் 204 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. ஷாகின் அப்ரிடி ஒன்பது ஓவர்களுக்கு 23 ரன்கள் தந்து மூன்று விக்கெட் கைப்பற்றினார்.

இதைத்தொடர்ந்து இலக்கை நோக்கி விளையாடிய பாகிஸ்தான் அணிக்கு துவக்க ஆட்டக்காரர்கள் அப்துல்லா ஷபிக் மற்றும் பகார் ஜமான் இருவரும் அதிரடியான துவக்கம் தந்தார்கள். இருவருமே அரை சதம் அடித்து 100 ரன்னுக்கு மேல் பார்ட்னர்ஷிப் தந்து அணி வெற்றி பெற முக்கிய காரணமாக இருந்தார்கள்.

இந்த வெற்றியின் மூலம் பாகிஸ்தான் அணி இன்னும் அரை இறுதி வாய்ப்பில் நீடிக்கிறது. இன்று நியூசிலாந்து தென் ஆப்பிரிக்க அணிகள் மோதிக் கொள்ளும் போட்டியில் நியூசிலாந்து தோற்க வேண்டும். அப்படி தோற்கும் பொழுது பாகிஸ்தான் நியூசிலாந்து மோதிக் கொள்ளும் போட்டி வாழ்வா சாவா போட்டியாக மாறும்.

- Advertisement -

இந்த நிலையில் நேற்று ஒருநாள் கிரிக்கெட்டில் அதிவேகமாக 100 விக்கெட் கைப்பற்றிய வேகப்பந்துவீச்சாளர் என்ற சாதனை படைத்த ஷாகின் அப்ரிடி பேசும்பொழுது “சாதனைகள் என்பது உடைக்கப்பட வேண்டும். நான் பாகிஸ்தான் அணிக்காக சாதனை படைத்திருக்கிறேன் என்பது மகிழ்ச்சியானது. ஷாகித் அப்ரிடி எனக்கு எப்பொழுதும் டிப்ஸ் கொடுப்பார். அவர்தான் என் ஹீரோ. அவரைப்போல் விளையாடவே நான் முயற்சி செய்கிறேன்.

நாங்கள் முதல் நான்கு இடங்களுக்குள் வருவதற்கு தற்பொழுது முயற்சி செய்து கொண்டிருக்கிறோம். இன்று போட்டியை சீக்கிரம் முடித்து ரன் ரேட்டை உயர்த்துவது எங்களின் நோக்கமாக இருந்தது.

நாங்கள் ஒரு அணியாக கடந்த சில போட்டிகளில் சரியாக செயல்படவில்லை. நாங்கள் சில பெரிய தவறுகள் செய்தோம். பீல்டிங்கில் சில முக்கியமான கேட்ச்களை விட்டோம். சிறந்த பீல்டிங் இருந்திருந்தால் சிறந்த முடிவுகளும் கிடைத்திருக்கும்!” என்று கூறியிருக்கிறார்!