முடி வெட்டியதற்கு காசு கொடுக்காத விவகாரம்.. அலெக்ஸ் கேரியிடம் மன்னிப்பு கேட்ட அலிஷ்டர் குக்

0
1700

இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான அஷஸ் டெஸ்ட் தொடர் பரபரப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. 5 போட்டிகளைக் கொண்ட இந்த டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலியா 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது .

இந்நிலையில் இரண்டு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி தற்போது நடைபெற்று வருகிறது.லீட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணி 251 ரன்களை வெற்றி இலக்காக இங்கிலாந்துக்கு நிர்ணயித்திருக்கிறது .

- Advertisement -

நான்காம் நாளான இன்று தற்போது வரை இங்கிலாந்து அணி 11 ரன்களை எடுத்து மூன்று விக்கெட்டுகளை இழந்து இருக்கிறது. இன்னும் வெற்றிக்கு 132 ரன்களை தேவைப்படும் நிலையில் இங்கிலாந்து அணியின் கைவசம் ஏழு விக்கெட்டுகள் இருப்பதால் நிச்சயமாக வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது .

ஆஷஸ் தொடர் என்றாலே பரபரப்புக்கும் சர்ச்சைகளுக்கும் பஞ்சம் இருக்காது இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியின் போது ஆஸ்திரேலியா அணியின் விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரி இங்கிலாந்து அணியின் பேட்ஸ்மேன் ஜானி பேர்ஸ்டோ ரன் அவுட் செய்த விதம் பெரும் சர்ச்சையை கிளப்பியது. இது தொடர்பாக இங்கிலாந்து முன்னாள் வீரர்கள் மற்றும் ரசிகர்கள் ஆஸ்திரேலிய அணியும் அந்த அணியின் விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரியையும் கடுமையாக விமர்சித்து வந்தனர் .

இந்த சூழலில் இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டனான அலிஸ்டர் குக் மூன்றாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது நாள் வர்ணனையின் போது ஆஸ்திரேலியா அணியின் விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரியை பற்றிய குற்றச்சாட்டை வைத்திருந்தார் . அதன்படி அலெக்ஸ் கேரி முடி வெட்டிக் கொள்வதற்கு லண்டனில் உள்ள சலூன் கடைக்கு சென்றதாகவும் அந்தக் கடையில் முடி வெட்டிய பிறகு தன்னிடம் பணம் ரொக்கமாக இல்லை ஆன்லைன் மூலமாக பணப்பரிவர்த்தனை செய்கிறேன் என கூறிச் சென்றதாகவும் தெரிவித்துள்ளார் ஆனால் அலெக்ஸ் கேரி அந்த நபருக்கு காசு கொடுக்கவில்லை எனவும் தெரிவித்திருக்கிறார் .

- Advertisement -

இது மிகப்பெரிய சர்ச்சையை கிளப்பியது . மேலும் இது தொடர்பாக இங்கிலாந்தில் இருந்து வரும் தி சன் பத்திரிக்கையும் இதே செய்தியை வெளியிட்டு இருந்தது . இந்த செய்திக்கு சமூக வலைத்தளம் மூலமாக மறுப்பு தெரிவித்த ஆஸ்திரேலியா அணியின் ஸ்டீவன் ஸ்மித்” இது முற்றிலும் தவறான செய்தி என்றும் அலெக்ஸ் கேரி லண்டனில் முடி வெட்டி கொள்ளவில்லை என்றும் தெரிவித்திருக்கிறார் . கொஞ்சமாவது தொழில் தர்மத்தை பின்பற்றுங்கள் எனவும் அந்தப் பத்திரிக்கைக்கு கண்டனத்தை தெரிவித்துள்ளார் .

இந்நிலையில் இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டனும் வர்ணனையாளருமான அலிஸ்டர் குக் தனது வர்ணனைக்காக மன்னிப்பு கேட்டிருக்கிறார். இது குறித்து பேசி இருக்கும் அவர் ” வேறொரு நபருக்கு பதிலாக அலெக்ஸ் கேரி என்று பதிவிட்டதால் தானும் அவ்வாறு தவறாக நினைத்து விட்டதாக தெரிவித்துள்ளார் . இதற்காக நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் எனவும் தெரிவித்திருக்கிறார் குக் .