தற்போது சுப்மன் கில் தலைமையில் இந்திய டெஸ்ட் அணி இங்கிலாந்து சென்றிருக்கிறது. அங்கு ஆரம்பமே இந்திய அணிக்கு சோகமாகவே அமைந்திருக்கிறது. இது குறித்து இந்திய பத்திரிக்கையாளர் விமல் குமார் பேசியிருக்கிறார்.
இந்திய ஏ அணி உடன் முக்கியமான வீரர்களில் சிலர் ஏற்கனவே இங்கிலாந்துக்கு சென்று விட்டார்கள். எஞ்சி இருந்த சிலர் கேப்டன் கில் மற்றும் பயிற்சியாளர் கம்பீர் உடன் புறப்பட்டு இங்கிலாந்து சென்று சேர்ந்திருக்கிறார்கள்.
13ஆம் தேதி ஆரம்பம்
தற்போது இந்திய ஏ அணியில் இடம் பெற்று இங்கிலாந்து ஏ அணிக்கு எதிராக இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடி சில வீரர்கள் பயிற்சி எடுத்து வருகிறார்கள். இந்த நிலையில் பயிற்சி கிடைக்காத தற்போது புறப்பட்டு சென்றுள்ள வீரர்களுக்கு 13-ஆம் தேதி நான்கு நாட்கள் கொண்ட பயிற்சி போட்டி இந்திய அணியை இரண்டாகப் பிரித்து நடைபெற இருக்கிறது.
மேலும் இந்த ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் டெஸ்ட் போட்டி லண்டன் லீட்ஸ் மைதானத்தில் இந்த மாதம் ஜூன் இருபதாம் தேதி துவங்குகிறது. இந்திய அணி ஒருபுறத்தில் தயாராகிக் கொண்டிருக்க இங்கிலாந்து அணியும் சிறப்பான முறையில் தயாராகி வருகிறது.
இங்கிலாந்தில் நடந்த சோகம்
இந்த நிலையில் சுப்மன் கில் தலைமையில் இங்கிலாந்தில் இறங்கிய இந்திய அணிக்கு இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் சார்பிலோ அல்லது ஊடகங்கள் சார்பிலும் பெரிய வரவேற்புகள் எதுவுமே இல்லை என இந்திய பத்திரிகையாளர் விமல் குமார் தெரிவித்திருக்கிறார். வழக்கமாக இந்திய அணி எங்கு சென்றாலும் பெரிய அளவில் வரவேற்பு கிடைக்கும். ஊடகங்கள் இந்திய அணி செல்லும் இடமெல்லாம் பின் தொடர்ந்து செல்லும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : நான் ODI கிரிக்கெட்டில் ஓய்வு பெற காரணம்.. இந்த இந்திய வீரர்தான்.. இப்ப தேறிட்டேன் – ஸ்மித் பேட்டி
இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் விராட் கோலியின் பெயரை வைத்து டெஸ்ட் தொடருக்கான டிக்கெட் விற்பனை செய்ய ஆரம்பித்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா இருவரும் ஒரே நேரத்தில் ஓய்வு பெற்று விட்டதால், கில் தலைமையிலான இளம் இந்திய அணிக்கு ரசிகர்களிடையே வரவேற்பு இல்லை என கூறப்படுகிறது.






