முதல் டெஸ்ட் மட்டும் தானே முடிந்திருக்கு, சீரிஸ் எங்களுக்கு தான்னு இன்னும் கான்பிடான்ஸா இருக்கோம் – ஆஸி., கீப்பர் உறுதி!

0
1731

முதல் டெஸ்ட் மட்டுமே முடிந்திருக்கிறது, இந்த தோல்வி எங்களை எந்த விதத்திலும் பாதிக்காது என்று பேசியுள்ளார் அலெக்ஸ் கேரி.

இந்தியாவிற்கு வந்திருக்கும் ஆஸ்திரேலியா அணி, முதற்கட்டமாக நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. பார்டர் கவாஸ்கர் டிராபிக்காக இரு அணிகளும் மோதிக் கொள்ளும் இந்த டெஸ்ட் தொடரின் முதல் போட்டி நாக்பூர் மைதானத்தில் நடைபெற்றது.

- Advertisement -

ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா மற்றும் ரோகித் சர்மா ஆகிய மூவரும் அபாரமாக செயல்பட்டதால், 132 ரன்கள் மற்றும் இன்னிங்ஸ் வித்தியாசத்தில் இந்திய அணி அபாரமாக வெற்றி பெற்று டெஸ்ட் தொடரில் முன்னிலையும் பெற்றுள்ளது.

இந்த இரு அணிகளுக்கும் இடையே நடக்கவுள்ள இரண்டாவது டெஸ்ட் போட்டி டெல்லி மைதானத்தில் நடைபெற உள்ளது. முதல் டெஸ்டில் ஆஸ்திரேலியா அணியின் முன்னணி வீரர்களான வேகப்பந்துவீச்சாளர் மிட்ச்சல் ஸ்டார்க் மற்றும் நட்சத்திர ஆல்ரவுண்டர் கேமரூன் கிரீன் இருவரும் காயம் காரணமாக முதல் டெஸ்டில் இடம் பெறவில்லை.

இதுதான் ஆஸ்திரேலியா அணிக்கு தோல்வியை தந்திருக்கிறதா? என்றால், இல்லை. டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சரிவர செயல்படாதது ஒரு காரணமாக இருக்கிறது. ஆனால் இவர்கள் இருவரும் மீண்டும் அணிக்கு திரும்பினால் கூடுதல் உத்வேகத்தை கொடுக்கும் என்றும் பேசப்பட்டு வருகிறது.

- Advertisement -

இந்நிலையில் கேமரூன் கிரீன் உடல்நிலை எப்படி இருக்கிறது? இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு அவர் திரும்பி விடுவாரா? மற்றும் முதல் டெஸ்ட் போட்டியில் அடைந்த தோல்வி எந்த அளவிற்கு பாதிப்பை கொடுத்திருக்கிறது? என்பது பற்றி பேசியுள்ளார் ஆஸ்திரேலியா அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் அலெக்ஸ் கேரி.

“முதல் போட்டியில் தோல்வியை தழுவி இருந்தாலும் அது எங்களை மனதளவில் பாதிக்கவில்லை. அதில் இருக்கும் தவறுகளை சரி செய்து கொண்டு அணுகுமுறைகளில் மாற்றம் கொண்டுவர பயிற்சிகளை செய்து வருகிறோம். மீதம் 3 போட்டிகள் இருக்கின்றன. இன்னும் தொடரை கைப்பற்றுவதற்கு எங்களுக்கு நிறைய வாய்ப்புகளும் இருக்கிறது. கடந்த 12 முதல் 18 மாதங்களாக நாங்கள் வெளிப்படுத்திய கிரிக்கெட்டை முதல் போட்டியில் வெளிப்படுத்தவில்லை. மீதமிருக்கும் போட்டிகளில் அதை வெளிக்கொண்டுவர முயற்சிப்போம்.”

“கேமரூன் கிரீன் இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு இருக்கிறாரா என்பதை பயிற்சி மருத்துவர்களிடம் கேட்க வேண்டும். ஆனால் நூறு சதவீதம் உடல் தகுதியுடன் இருக்கிறார் என்கிற செய்திகளை கேள்விப்பட்டேன். அதற்காக உடனடியாக அவரை பிளேயிங் லெவனில் ஆட வைப்பது எந்த அளவிற்கு சரியாக இருக்கும் என்பது அணி நிர்வாகம் தான் முடிவு செய்ய வேண்டும். அவர் அணிக்கு திரும்பினால் நிச்சயம் மிடில் ஆர்டரில் அதிக பலத்துடன் காணப்படும் கூடுதல் அழுத்தமும் கொடுப்பதற்கு உதவும்.” என்றார்.