“வாங்க நம்ம நாட்டுக்கு கிளம்பலாம்.. இந்திய அணி மொத்தமா சீல் பண்ணிடுச்சு” – அலைஸ்டர் குக் பேச்சு

0
684
Cook

மார்ச் 8. இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் ஆதிக்கம் தொடர்ந்து வருகிறது. போட்டியின் இரண்டாவது நாளில் இன்று சிறப்பாக விளையாடிய ரோகித் சர்மா மற்றும் கில் இருவரும் அதிரடியாக சதம் அடித்தார்கள்.

இவர்களைத் தொடர்ந்து விளையாடிய அறிமுக வீரரான தேவ்தத் படிக்கல் மற்றும் சர்பராஸ் கான் இருவரும் சிறப்பாக விளையாடி அரை சதங்கள் அடித்தார்கள். இந்தப் போட்டியில் இந்திய அணியின் முதல் ஐந்து வீரர்கள் குறைந்தது 50 ரன்கள் எடுத்திருக்கிறார்கள்.

- Advertisement -

இந்த போட்டிக்கான டாசில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி, பேட்டிங் செய்வதற்கு மிகவும் சாதகமான தரம்சாலா ஆடுகளத்தில், குல்தீப் யாதவ் அபாரமான பந்துவீச்சில் சிக்கி 218 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட் ஆனது.

அதே சமயத்தில் இந்திய அணி இந்தத் தொடரில் முதல்முறையாக 450 ரன்கள் கடந்து மிகப்பெரிய ஸ்கோரை கொண்டு வந்திருக்கிறது. தற்போது இந்திய அணியின் முன்னிலை 200 ரன்கள் தாண்டி சென்று கொண்டிருக்கிறது. இந்த காரணத்தால் நாள் இங்கிலாந்து அணி இந்த போட்டியில் திரும்பி வருவதற்கான வாய்ப்புகளே இல்லை, நான்குக்கு ஒன்று என்று படு மோசமாக தொடரை இழக்க வேண்டி வருகின்ற நிலைமையில்தான் இருக்கிறது.

கடந்த முறை ஜோ ரூட் தலைமையில் இந்தியா வந்த இங்கிலாந்து அணி இதே போன்று தொடரின் முதல் போட்டியில் அபாரமாக வென்று, அதற்கு அடுத்த நான்கு போட்டிகளையும் வரிசையாக தோற்று பரிதாபமாக நாடு திரும்பியது. தற்பொழுதும் இங்கிலாந்து அணிக்கு அதே மாதிரியான ஒரு பரிதாப சூழ்நிலையே காணப்படுகிறது.

- Advertisement -

இதுகுறித்து இங்கிலாந்து முன்னால் கேப்டன் அழைத்தர் குக் கூறும் பொழுது “நேற்று இந்திய அணி ஆட்டத்தில் ஒட்டுமொத்தமாக கண்ட்ரோலுக்கு வந்தது. இந்திய அணி இந்த போட்டியில் ஒவ்வொரு கதவாக அடைத்து பூட்டுகிறோம் என்பதை போன்று செயல்பட்டு இருக்கிறது. இனி இங்கிலாந்து அணி இந்த போட்டியில் திரும்பி வந்து வெல்வதற்கான வாய்ப்புகள் கிடையாது. இதுடெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு மெதுவான மரணம் போன்றது. விசித்திரமாக ஏதாவது நடந்தால் தவிர இங்கிலாந்து வெல்ல வாய்ப்பில்லை.

இதையும் படிங்க : 473/8.. 26 ஆண்டுக்கு பின் இந்திய அணி சாதனை.. குல்தீப்-பும்ரா வரை பேட்டிங்கில் கலக்கல்

கில் மற்றும் ரோஹித் சர்மாவுக்கு இடையே ஒரு நல்ல அற்புதமான பார்ட்னர்ஷிப் அமைந்தது. குறிப்பாக கில் இன்று காலையில் மிகவும் ஆக்ரோஷமாக விளையாடினார். ரோகித் சர்மா சூழ்நிலையை புரிந்து கொண்டு சதத்தை நோக்கி சிறப்பாக சென்றார். இங்கிலாந்து பந்துவீச்சாளர்களுக்கு இது மிக கடினமாக அமைந்துவிட்டது” என்று கூறியிருக்கிறார்.