“என்ன வேணா சொல்லுங்க.. அடுத்த விராட் கோலி இந்த பையன்தான்” – அலைஸ்டர் குக் உறுதி

0
966
Cook

சமீப காலத்தில் டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணியின் இளம் வீரர் சுப்மன் கில் பேட்டிங் ஃபார்ம் மிகவும் மோசமாக இருந்து வந்தது.

தென் ஆபிரிக்கா அணிக்கு எதிராக அவர்களது நாட்டில் நடைபெற்ற இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் கில் பேட்டிங் செயல்பாடு சுமாராகத்தான் இருந்தது.

- Advertisement -

ஆனால் தென் ஆப்பிரிக்க நாட்டில் முதல் முறையாக டெஸ்ட் கிரிக்கெட் விளையாடுவது என்பது சுலபமான காரியம் கிடையாது. மேலும் இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு கொடுக்கப்பட்ட ஆடுகளம் யாராலும் விளையாட முடியாத அளவுக்கு மோசமாக இருந்தது.

எனவே இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கு முதல் இரண்டு போட்டிகளுக்கு அறிவிக்கப்பட்ட அணியில் தில்லுக்கு மீண்டும் வாய்ப்பு கொடுக்கப்பட்டது.

இந்த இரண்டு டெஸ்ட் போட்டியில் முதல் மூன்று இன்னிங்ஸ்களில் அவர் மோசமாக ஏமாற்றினார். அவர் ஆட்டம் இழக்கும் விதம் மிகவும் கவலை அளிப்பதாக இருந்தது. இந்த நிலையில் இன்று இந்திய அணியின் இரண்டாவது இன்னிங்ஸில் மிக முக்கியமான நேரத்தில் 110 ரன்கள் எடுத்தது அணியையும் அணியில் தன் இடத்தையும் காப்பாற்றி இருக்கிறார்.

- Advertisement -

கில் குறித்து பேசி உள்ள இங்கிலாந்து முன்னால் கேப்டன் குக் கூறும் பொழுது “கில் அழகாக விளையாடினார். அவருக்கு தீவிரமான திறமை இருக்கிறது. மேலும் அவருக்கு அதிக அழுத்தம் இருந்திருக்கலாம். உலகக் கோப்பை நேரத்தில் இந்தியாவில் பல விளம்பர பலகைகளில் கோலியின் புகைப்படங்கள்தான் இருந்தது. ஆனால் அவர் இடத்தை இவர்தான் நிரப்ப போகிறார்.

இந்தியா போன்ற ஒரு பெரிய நாட்டில், கிரிக்கெட்டில் இருக்கும் அழுத்தத்தை உங்கள் தோள் மீது சுமப்பது பெரிய விஷயம். இளம் வீரர்களாக சச்சின் மற்றும் விராட் கோலி சமாளித்த ஒன்று இது. இப்போது கில்லும் இதைச் சமாளிக்க கற்றுக் கொள்ள வேண்டும்.

இதையும் படிங்க : “இந்திய வீரர்கள் பதட்டமா இருக்காங்க.. 600 ரன் டார்கெட் வச்சாலும் அடிப்போம்” – ஆண்டர்சன் பேட்டி

இன்று நாம் பார்த்தது என்னவென்றால் அவர் எவ்வளவு திறமையானவர்? எவ்வளவு நாட்கள் வைத்திருக்கிறார்? என்பதைத்தான். மேலும் இந்த தொடரில் மீதி இருக்கும் போட்டிகளில் நாம் அவரது முழு ஆட்டத்தை பார்க்க போகிறோம். அவர் ஃபார்மில் இல்லாமல் இருந்தார். அடுத்து கேஎல் ராகுல் மற்றும் விராட் கோலி வந்தாலும் கூட, தேர்வாளர்கள் கில்லை புறக்கணிக்க முடியாத நிலையை உருவாக்கி இருக்கிறார்” என்று கூறி இருக்கிறார்.