“அப்போ நான் மட்டும் சச்சின், சேவாக் விக்கெட்டை எடுத்திருந்தா?!..நாங்கதான் வின்” எல்லாத்துக்கும் காரணம் இந்த பாகிஸ்தான் கேப்டன் தான் – 20 ஆண்டுகால உண்மையை வெளியே சொன்ன சோயிப் அக்தர்!

0
109

2003 ஆம் ஆண்டு நடைபெற்ற உலக கோப்பையில் நடந்த சம்பவத்தை நினைவு கூர்ந்து பேசி உள்ளார் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேத பந்துவீச்சாளர் சோயிப் அக்தர்.

கிரிக்கெட் உலகில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டிக்கு என்று தனி வரவேற்பு இருக்கிறது. கடைசியாக 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 உலக கோப்பை போட்டியின் போது இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதியது. அப்போது இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. அதுவரை உலகக் கோப்பை போட்டியில் பாகிஸ்தான் அணியிடம் இந்திய அணி தோல்வியை தழுவியது இல்லை. அதுவே முதல் முறையாகும்.

- Advertisement -

அதன்பிறகு தற்போது ஆகஸ்ட் 28ஆம் தேதி நடைபெற உள்ள ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் இந்த இரு அணிகளும் மோதவிருக்கின்றன. அதற்கு முன்பாக பலரும் தங்களது கருத்துக்களையும் கணிப்புகளையும் முன்வைத்து வரும் நிலையில், 2003 ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடரில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டியை நினைவு கூர்ந்து போட்டியில் நடந்த சில சுவாரஸ்யமான சம்பவங்களையும் ரசிகர்களிடம் பகிர்ந்து இருக்கிறார் பாகிஸ்தானியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் சோய்ப் அக்தர்.

2003 ஆம் ஆண்டு உலகக் கோப்பையின் தொடரில் நடைபெற்ற இந்தியா பாகிஸ்தான் போட்டி கிரிக்கெட் ரசிகர்கள் எவ்வாறு நினைவில் இருந்தும் நீங்க முடியாததாக இருக்கும். கங்குலி தலைமையிலான இந்திய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. குறிப்பாக சச்சின் டெண்டுல்கர் பாகிஸ்தான் பந்துவீச்சாளர்களை துவம்சம் செய்து 75 பந்துகளில் 98 ரன்கள் அடித்தார். இந்திய அணி 274 ரன்கள் இலக்கை துரத்துவதற்கு இது முக்கிய பங்களிப்பாக இருந்தது. இறுதியில் இந்திய அணி அபாரமாக வெற்றி பெற்று உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணியிடம் தோல்வியை தழுவியதே இல்லை என்ற சாதனையை தக்க வைத்தது.

அந்தப் போட்டியில் பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீட்டில் நம்பிக்கை நாயகனாக இருந்து வந்த அக்தர் சற்று மோசமாகவே பந்து வீசினார். அவரது முதல் ஓவரை சச்சின் டெண்டுல்கர் 18 ரன்கள் அடித்து காலி செய்தார். இந்த போட்டிக்கு முன்பாக அக்தருக்கு உடல்நிலை மோசமாக இருந்ததாகவும் கிட்டத்தட்ட ஒன்றரை நாட்கள் மருத்துவமனைக்கும் பயிற்சிக்கும் மாறி மாறி சென்று வந்ததாகவும் அவர் குறிப்பிட்டார். மேலும் இந்த போட்டியில் நான் விளையாடவில்லை என்று கூறிய போதும் அப்போதைய கேப்டன் வக்கார் யூனிஸ் என்னை நிச்சயம் விளையாட வேண்டும் என்று பணித்ததாகவும் தனது பேட்டியில் குறிப்பிட்டு இருந்தார்.

- Advertisement -

அக்தர் கூறுகையில், “2003 ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடரில் இந்திய அணிக்கு எதிரான போட்டிக்கு முன்பாக கிட்டத்தட்ட ஒன்றரை நாட்கள் வரை நான் மருத்துவமனையில் இருந்தேன். போட்டிக்கு முந்தைய நாள் சற்று உடல்நிலை தேறியதாக தெரிந்தது. அதுவரை 25 ஊசிகள் எனது கணுக்காலில் போடப்பட்டது. நான் பந்து வீசுவதற்கு சிரமப்பட்டு வருகிறேன். என் உடல்நிலை முழு தகுதியுடன் இல்லை என்று எனது கேப்டனான வக்கார் யூனிஸிடம் தெரிவித்தேன்.” என்றார்.

“இம்ரான் கான் கேப்டனாக இருந்திருந்தால் எதிரணி பேட்ஸ்மனின் உடலை நோக்கி பந்தை வீசு. ஏதேனும் ஒன்று அல்லது இரண்டு பந்துகளை அடிக்க முடியும். அதற்கு மேல் அவர் திணறத்தான் முடியும். நிச்சயம் அப்போது விக்கெட்டை எடுத்து விடலாம். உனது இலக்கு எதிரணி வீரரின் தலையாக தான் இருக்க வேண்டும். ஒன்று, இரண்டு பவுண்டரிகள் அடித்ததும் சோர்வு அடையாதே என்று கூறி இருப்பார். ஆனால் வக்கார் யூனிஸ் என்னை அப்படி ஊக்கப்படுத்தவில்லை. எனது பந்து மிகவும் மோசமாக இருந்தது. போதிய உத்வேகம் கிடைக்கவில்லை. கடைசியில் என்னை சரியாக பயன்படுத்தவும் இல்லை.” என்று வருத்தப்பட்டார்.

- Advertisement -

“எனது துவக்க ஓவரில் நான் சச்சின் மற்றும் சேவாக் இருவரின் விக்கெட்டை வீழ்த்தி இருந்தால், அன்று போட்டியில் எனது பந்துவீச்சு வேறு மாதிரியாக இருந்திருக்கும். நிச்சயம் இந்திய அணியை வீழ்த்தி இருப்போம்.” எனவும் குறிப்பிட்டார்.

இந்திய அணிக்கு எதிராக பத்து ஓவர்கள் வீசிய அவர் 72 ரன்களை விட்டுக் கொடுத்தார். சச்சினின் விக்கெட்டை மட்டும் வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.