இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் முதல் வாய்ப்பு.. யார் இந்த ஆகாஷ் தீப்.. ஆல் ரவுண்டராக முடியுமா

0
124
Akash

இந்தியாவில் நடைபெற்று வரும் இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின், கடைசி மூன்று போட்டிகளுக்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டது.

இந்த அறிவிப்பில் மிக முக்கியமானதாக விராட் கோலி 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட இந்திய அணியில் இடம் பெற மாட்டார் என்பது இருந்தது. அடுத்து கேஎல்ராகுல் மற்றும் ரவீந்திர ஜடேஜா இருவரும் காயத்திலிருந்து திரும்பி வந்ததும் அமைந்தது. மேலும் இவர்கள் கடைசி நேரத்தில் பார்த்துதான் விளையாடும் அணியில் தேர்வு செய்யப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

மேலும் இந்த அணியில் காயம் காரணமாக ஸ்ரேயாஸ் ஐயர் வெளியேறியிருக்கிறார். எனவே யாரை நீக்குவது என்கின்ற குழப்பம் இந்திய கிரிக்கெட் நிர்வாகத்திற்கு ஏற்படவில்லை. புதிதாக வாய்ப்பு கொடுக்கப்பட்ட ரஜத் பட்டிதார் மற்றும் சர்பராஸ் கான் அணியில் நீடிக்கிறார்கள்.

இத்தோடு வேகப்பந்துவீச்சாளர் ஆவேஷ் கான் நீக்கப்பட்டு அவருடைய இடத்திற்கு பெங்கால் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக விளையாடும் வேகப்பந்துவீச்சாளர் ஆகாஷ் தீப் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.

இவர் இந்திய வெள்ளைப்பந்து அணிகளுக்கு ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்பட்டு விளையாடும் வாய்ப்பு கிடைக்காமல் இருந்தவர். கடைசியாக தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான வெள்ளைப்பந்து தொடரிலும் இந்திய அணிக்கு தேர்வானார்.

- Advertisement -

27 வயதான இந்த வலதுகை வேகப்பந்துவீச்சாளர், இந்தியாவில் சமீபத்தில் அதிகாரப்பூர்வமற்ற மூன்று டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிராக 13 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார். இந்தச் சிறப்பான பந்துவீச்சு செயல்பாட்டின் காரணமாகவே தற்பொழுது இந்திய அணிக்கு அழைக்கப்பட்டிருக்கிறார்.

இவர் 2022 ஆம் ஆண்டு அடிப்படை விலையான 20 லட்சம் ரூபாய்க்கு ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியால் வாங்கப்பட்டார். மேலும் இவருடைய வேகத்தால் அணியின் கேப்டன் பாப் மிகவும் கவரப்பட்டார். இளம் வீரர்கள் சிறப்பான வேகத்தில் பந்து வீசுவது தனக்கு மகிழ்ச்சி அளிப்பதாக கூறியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : U19 WC பைனல்.. நாளை மழை வாய்ப்பு மற்றும் ஆடுகளம் எப்படி இருக்கும்?.. முழு புள்ளி விபரங்கள்

மேலும் இவர் கடைசிக்கட்டத்தில் அதிரடியாக சிக்ஸர்கள் அடிக்க முடிந்த பேட்டிங் பங்களிப்பு செய்யக்கூடியவராக இருக்கிறார். உள்நாட்டு முதல் தரப் போட்டிகளில் 27 பவுண்டரிகள் மற்றும் 32 சித்தர்கள் அடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. தென் ஆப்பிரிக்கா தொடரில் தீபக்சகர் இடத்திற்கு இவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவரது பேட்டிங் பங்களிப்பை இந்திய கிரிக்கெட் நிர்வாகம் கவனித்தும் வருகிறது. எதிர்காலத்தில் நல்ல வேகம் கொண்ட இவர் பேட்டிங்கில் கொஞ்சம் சிறப்பாக செயல்பட்டால், இந்திய அணியில் இவரை தொடர்ச்சியாக பார்க்க முடியும்!