ஐபிஎல் 2026.. சன்ரைசர்ஸ் அணி 300 ரன்கள் அடித்தால், 300 ரன்கள் விட்டு கொடுப்போம்.. ஆகாஷ் சோப்ரா கருத்து

0
494

ஐபிஎல் 2026 சீசனுக்கான ஏலத்தில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத்  அணியின் ஏல உத்தி குறித்து முன்னாள் இந்திய தொடக்க வீரர் ஆகாஷ் சோப்ரா, கேள்வி எழுப்பியுள்ளார். அணி ஒரு இன்னிங்ஸில் 300 ரன்கள் அடிக்கக்கூடிய அளவுக்கு வலுவாக இருக்கும்.

ஆனால் எதிரணியும் அதே அளவுக்கு ரன்கள் அடிக்கக்கூடிய வாய்ப்பு உள்ளது என்று அவர் குறிப்பிட்டுள்ளார். SRH அணி, டிசம்பர் அபுதாபியில் நடைபெற்ற IPL 2026 ஏலத்தில் ₹20.05 கோடி செலவழித்து 10 வீரர்களை வாங்கியது. பெரும்பாலான வீரர்களை அவர்களின் அடிப்படை விலையிலேயே எடுத்தனர்.

- Advertisement -

300 ரன்கள் அடிக்கும்:

அதில் லியாம் லிவிங்ஸ்டோன் ₹13 கோடி அவர்களின் அதிகபட்ச விலை ஆகும்.இது குறித்து பேசிய ஆகாஷ் சோப்ரா’வில் பகிர்ந்த வீடியோவில், முன்னாள் இந்திய வீரர் ஆகாஷ் சோப்ரா,  “அவர்கள் பேட்டிங்கை மிகவும் வலுவாக்கியுள்ளனர். இம்முறை 300-க்கு மேல் அடிக்கலாம். ஆனால் எதிரணியும் 300 அடிக்கக்கூடிய வாய்ப்பு உள்ளது. எதிரணியும் 300 அடிக்கலாம். இது வேலை செய்யும் என்று நம்புகிறேன்.”

“ஏனெனில் அவர்கள் நிச்சயம் பொழுதுபோக்கான கிரிக்கெட்டை விளையாடுவார்கள். ஆனால் இது சிறந்த உத்தியா? தெரியவில்லை. லியாம் லிவிங்ஸ்டோனை எடுத்திருந்தால், அவரை நிச்சயம் விளையாட வைப்பார்கள். அதனால் ஈஷான் மலிங்கா அல்லது பிரைடன் கார்ஸை புதிய பந்துடன் விளையாட முடியாது.”

- Advertisement -

பவர்பிளே பவுலர் கிடையாது:

“பவர்ப்ளே ஓவர்களில் பந்துவீச யாரும் இல்லை. ஷமியை விட்டது பெரிய இழப்பு. எனவே, ஒரு கட்டத்தில் புதிய பந்து பௌலர் தேவை. அதை அவர்கள் எடுக்கவில்லை,” என்று அவர் கூறினார். சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, IPL 2026 ஏலத்துக்கு முன்பு முகமது ஷமியை லக்னோ சூப்பர் ஜயண்ட்ஸ்  அணிக்கு டிரேடு செய்தது.

இதையும் படிங்க: ஐபிஎல் 2026.. முதல் 4 இடங்கள் பிடிக்கும் அணி எது? அஸ்வின் கணிப்பு

மினி ஏலத்தில் ஷிவம் மாவி மட்டுமே குறிப்பிடத்தக்க இந்திய வேகப்பந்து வீச்சாளராக எடுக்கப்பட்டார். “அதன் பிறகு, ஸ்பின்னில் ராகுல் சஹாரை விட்டுவிட்டனர். ஜீஷான் அன்சாரி மற்றும் ஷிவாங் குமார் உள்ளனர். ஷிவாங் நன்றாக பந்துவீசுகிறார் என்று கேள்விப்பட்டேன். ஆனால் இது மேம்பாடா? அப்படி தோன்றவில்லை. எனவே, அங்கு சிறிய கவலை உள்ளது” என்று அவர் கூறினார்.

- Advertisement -