ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் இந்திய அணியில் சர்ப்ராஸ் கானுக்கு வாய்ப்பு கொடுக்கக் கூடாது என வெளிப்படையாகவே ஆகாஷ் சோப்ரா தெரிவித்திருக்கிறார்.
இந்த மாதம் நவம்பர் 22ஆம் தேதி 5 போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடர் ஆஸ்திரேலியாவின் பெர்த் மைதானத்தில் ஆரம்பிக்கிறது. அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்தின் முதல் வாரத்தில் இந்த தொடர் முடிவுக்கு வருகிறது.
இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா தனிப்பட்ட காரணங்களுக்காக முதல் அல்லது இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாட முடியாத சூழ்நிலை நிலவுகிறது. குறிப்பாக அவர் எந்த டெஸ்ட் போட்டியில் விளையாட மாட்டார் என்பது குறித்து இன்னும் தெளிவாக முடிவாகாத நிலையில் இருக்கிறது.
எனவே தொடக்க இடத்திற்கும் பேட்டிங் வரிசையில் ஆறாவது இடத்திற்கும் என இரண்டு இடங்கள் காலி ஆகிறது. இந்த இரண்டு இடங்களுக்கும் கேஎல்.ராகுல், அபிமன்யு ஈஸ்வரன், சர்பராஸ் கான் மற்றும் குரு ஜுரல் என நான்கு வீரர்கள் இருக்கிறார்கள். இதில் எந்த இரண்டு வீரர்களுக்கு வாய்ப்பு கொடுப்பது என்பது பெரிய குழப்பமாக இருந்து வருகிறது.
இது குறித்து கருத்து தெரிவித்திருக்கும் ஆகாஷ் சோப்ரா கூறும் பொழுது ” சர்பராஸ் கான் நியூசிலாந்து அணிக்கு எதிராக 150 ரன்கள் ஒரு போட்டியில் எடுத்தார். இருந்தபோதிலும் கூட என்னைக் கேட்டால் கே.எல்.ராகுலை தான் விளையாட வைக்க வேண்டும் என்று சொல்வேன்.மேலும் சர்பராஸ் கானா இல்லை ஜுரலா என்றால் ஜூரலைதான் நான் விளையாட வைப்பேன்”
இதையும் படிங்க : பாகிஸ்தான் சீரிஸ் போகட்டும்.. இந்திய தொடருக்காக இத பண்ண விலகிட்டோம் – பேட் கம்மின்ஸ் பேட்டி
“ஏனென்றால் எனக்கு சர்பராஸ் கான் விளையாடும் பாணி குறித்து துல்லியமாக தெரியாது. மேலும் விளையாடும் முறைக்கு ஆஸ்திரேலியாவில் ரன்கள் எடுப்பது கடினமாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன். இதன் காரணமாகத்தான் இந்திய ஏ அணியில் கேஎல்.ராகுல் மற்றும் தூரல் இருவரையும் விளையாட வைத்திருக்கிறார்கள்” என்று விளக்கி இருக்கிறார்.