பாகிஸ்தான் சீரிஸ் போகட்டும்.. இந்திய தொடருக்காக இத பண்ண விலகிட்டோம் – பேட் கம்மின்ஸ் பேட்டி

0
796
Cummins

பாகிஸ்தான் அணிக்கு எதிராக மூன்றாவது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டியில் இருந்து விலகிக் கொண்டுள்ளது பற்றி ஆஸ்திரேலியா கேப்டன் பேட் கம்மின்ஸ் விளக்கமளித்திருக்கிறார்.

தற்போது ஆஸ்திரேலியா அணி உள்நாட்டில் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக விளையாடுகிறது. இதில் முதலில் நடைபெறும் ஒரு நாள் தொடரில் முதல் இரண்டு போட்டிகளில் இரண்டு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்று இருக்கின்றன.

- Advertisement -

இறுதிப் போட்டியான கடைசி போட்டி

பாகிஸ்தான் ஆஸ்திரேலியா அணிகள் மோதிக்கொண்ட முதல் ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி கடினப்பட்டு வென்றது. இன்று நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று தொடரை தற்பொழுது சமன் செய்திருக்கிறது.

இந்த நிலையில் அடுத்த ஞாயிற்றுக்கிழமை மூன்றாவது ஒருநாள் போட்டி நடைபெற இருக்கிறது. தொடரை யாருக்கு என முடிவு செய்யும் போட்டியாக அது அமைந்திருந்த போதும் கூட, இந்திய டெஸ்ட் தொடரில் பங்கேற்கும் பேட் கம்மின்ஸ், ஸ்டார்க், ஹேசில்வுட் ஆகியோர் ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் இருந்து விலகி இருக்கிறார்கள். ஏற்கனவே கேட்டு விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இவர்கள் யாரும் டி20 தொடரிலும் விளையாடப் போவதில்லை.

- Advertisement -

சிந்தனையை மாற்ற வேண்டும்

இந்த நிலையில் இன்று பாகிஸ்தான் அணிக்கு எதிராக தோல்வி அடைந்ததற்கு பின்னால் பேசிய கம்மின்ஸ் கூறும்பொழுது “எங்களுக்கு தற்போது ஒரு வாரம் இந்திய தொடருக்கு முன்பாக இருக்கிறது. எங்களுக்கு நல்ல பயிற்சி செஷன்கள் தேவைப்படுகிறது. எங்களுடைய மனம் இப்பொழுது சிவப்பு பந்து கிரிக்கெட்டுக்கு மாறுகிறது”

இதையும் படிங்க : 6000 ரன்.. 400 விக்கெட்.. சாதித்தவருக்கு இந்திய அணியில் இடமில்லை.. ஐபிஎல்தான் பெருசா? – ஹர்பஜன் சிங் விமர்சனம்

“இன்றைய போட்டி எங்களுக்கு சிறந்த நாளாக இல்லை. மேலும் பாகிஸ்தான் பந்துவீச்சாளர்களும் சிறப்பாக பந்து வீசினார்கள். ஆனால் நாங்கள் எடுத்த 163 ரன் குறைவானது. அதற்கு மேல் எடுத்திருக்க வேண்டும். ஆடுகளத்தில் கொஞ்சம் சீம் இருந்தது. நாங்களும் பந்துவீச்சில் ஃபில்டர்களை உள்ளே வைத்து தாக்கினோம். இருந்தபோதிலும் நாங்கள் வெற்றி பெற முடியவில்லை” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -