இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னாவின் பேட்டிங்கை பார்ப்பது போலவே, தற்போது ஐபிஎல் தொடரில் ஒரு இளம் வீரர் பேட்டிங்கை பார்ப்பதற்கு இருப்பதாக ஆகாஷ் சோப்ரா தெரிவித்திருக்கிறார்.
தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் பஞ்சாப் கிங்ஸ் என மூன்று அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்று இருக்கின்றன. மீதம் இருக்கும் ஒரு இடத்துக்கு மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் போட்டியிட்டு வருகின்றன.
பஞ்சாப் கிங்ஸ் எழுச்சி
ஐபிஎல் தொடரில் 10 ஆண்டுக்குப் பிறகு பஞ்சாப் கிங்ஸ் அணி ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலும் ரிக்கி பாண்டிங் பயிற்சியிலும் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்று இருக்கிறது. மேலும் இந்த அணியின் வெற்றிக்கு கேப்டன் மற்றும் பயிற்சியாளர் மற்றும் இல்லாமல் ஒவ்வொரு வீரரும் பொட்டிய காரணமாக இருந்து வந்திருக்கிறார்கள்.
நேற்று ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் பவர் பிளேவில் மூன்று விக்கெட்டுகளை இழந்து விட்ட பொழுதும், அந்த அணியின் இளம் இந்திய உள்நாட்டு இடது கை பேட்ஸ்மேன் நெகேல் வதேரா அதிரடியாக விளையாடி 37 பந்துகளில் 70 ரன்கள் குவித்தார். இவரது அதிரடியின் காரணமாக அந்த அணி 219 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. மேலும் இந்த தொடர் முழுக்க அவர் பஞ்சாப் கிங்ஸ் எப்போதெல்லாம் நெருக்கடியில் இருந்ததோ அப்பொழுதெல்லாம் ரன்கள் எடுத்து கொடுத்திருக்கிறார்.
சுரேஷ் ரெய்னாவை நினைவுபடுத்துகிறார்
இதுகுறித்து ஆகாஷ் சோப்ரா பேசும் பொழுது “நெகேல் வதேரா நேற்று சிறப்பாக விளையாடினார். தொழில்நுட்ப ரீதியாகவும் அவர் மிகவும் கச்சிதமான ஒரு பேட்ஸ்மேன். அவர் சூழலுக்கு எதிராக விளையாடும் பொழுது சுரேஷ் ரெய்னாவை நினைவுபடுத்துகிறார். அவர் இன்சைட் அவுட் ஷாட் விளையாடும் பொழுதும், அவர் கால்களை பயன்படுத்தும் விதமும் சுரேஷ் ரெய்னாவை நன்றாக நினைவுபடுத்துகிறது”
இதையும் படிங்க : விராட் கோலி பத்தி சோகமான ஒரு உண்மையை சொல்றேன்.. இதுதான் அடுத்து நடக்க போகுது – ரவி சாஸ்திரி பேட்டி
“அவர் எப்பொழுதும் ஆட்டத்தை கட்டுக்குள் வைத்திருக்கிறார். அவர் பின்தங்கி இருப்பதாக தெரிவது இல்லை. அவர் முதலில் பேட்டிங் செய்தாலோ அல்லது இரண்டாவதாக பேட்டிங் செய்தாலோ எப்பொழுதும் இன்னிங்ஸை தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார். அவருக்கு ராஜஸ்தான் அணி என்றால் பிடிக்கும் போல. ஏற்கனவே இந்த ஐபிஎல் தொடரில் அவர்களுக்கு எதிராக ஒரு அரைசதம் அடித்திருந்தார். மேலும் நேற்றைய போட்டியிலும் மிக முக்கியமான 70 ரன்களை எடுத்தார்” என்று கூறியிருக்கிறார்.






