சர்பராஸ் கான் வாழ்க்கையை ஏன் கெடுக்கறிங்க.. கம்பீர் சொன்னது எப்படி வெளியே வந்தது? – ஆகாஷ் சோப்ரா கேள்வி

0
164
Aakash

இந்திய டிரெஸ்ஸிங் ரூம் விஷயங்களை மீடியாக்களுக்கு சர்ப்ராஸ் கான் கசிய விட்டார் என கம்பீர் கூறியதாக வரும் செய்திகள் குறித்து ஆகாஷ் சோப்ரா மிகவும் காட்டமான விமர்சனத்தை முன் வைத்திருக்கிறார்.

இந்திய அணியின் ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்தின் போது இந்திய அணிக்குள் நடந்த முக்கியமான விஷயங்கள் தொடர்பாக மீடியாக்கள் செய்திகள் வெளியிட்டன. இந்த விஷயங்கள் அனைத்தையும் சர்ப்ராஸ் கான் மீடியாக்களுக்கு கசிய விட்டதாக கம்பீர் இந்திய கிரிக்கெட் நிர்வாகக் கூட்டத்தில் தெரிவித்ததாகவும் செய்திகள் வெளி வந்தன.

- Advertisement -

அந்தப் பையனின் வாழ்க்கையைக் கெடுக்காதீங்க

மேலும் பும்ரா காயம் மிகவும் பெரிதானது எனவும், அவரை படுக்கையில் ஓய்வெடுக்கும்படி மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளதாகவும் செய்திகள் வெளி வந்தன. இந்த செய்திகளுக்கு நேற்று பதிலளித்த பும்ரா போலியானவைகள் என்றும் இதை பார்த்து தனக்கு ஒரு கட்டத்தில் சிரிப்பு வந்தது என்றும் பதிலடி கொடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து ஆகாஷ் சோப்ரா பேசும் பொழுது “இந்த செய்திகள் எல்லாம் சோர்ஸ் வழியாக நடக்கும் கதையாக மாறி இருக்கிறது. கம்பீர் இந்திய அணியின் கூட்டத்தில் பேசிய விஷயங்களை இந்திய இளம் வீரர் ஒருவர் மீடியாக்களுக்கு பரவ விட்டதாக செய்திகள் பரப்பப்பட்டன. இதை இந்திய அணி நிர்வாகத்தின் கூட்டத்தில் கம்பீர் வெளிப்படுத்தியதாகவும் செய்திகள் வந்தன. விஷயங்களை கசிய விட்ட இந்திய வீரர் சர்பராஸ் கான் என கூறப்படுகிறது. என்னுடைய கேள்வி என்னவென்றால் இவர்தான் கசிய விட்டார் என கம்பீர் பேசியதாக கூறப்படும் விஷயங்கள் எப்படி கசிந்தது?”

- Advertisement -

பும்ரா விஷயத்திலும் நடந்தது

“நீங்கள் இதிலிருந்து ஆச்சரியப்படத் தொடங்குங்கள். ட்ரெஸ்ஸிங் ரூம் விஷயம் வெளியானது குறித்தான விஷயம் மீண்டும் வெளியாகியிருக்கிறது. இதெல்லாம் யார் மூலமாக வெளியாகிறது? நீங்கள் சர்பராஸ் கான் மாதிரியான ஒரு இளம் வீரரை பற்றி இப்படி பேசுகிறீர்கள். இது அவரது வாழ்க்கையை கெடுத்து விடும். இதற்கு அவரால் எதிர்வினை ஆற்ற முடியாது. ஏன் இவ்வாறு ஒரு குழந்தையின் வாழ்க்கையை கெடுக்கிறீர்கள்?”

இதையும் படிங்க : 308 ரன்.. ஆஸி வீராங்கனை யாரும் செய்யாத முதல் சாதனை.. இங்கிலாந்து அணி தோல்வி

“ஆதாரங்கள் சில நேரங்களில் நம்ப முடியாதவை. பும்ரா விஷயத்தில் அது நடந்தது. பும்ரா படுக்கையில் ஓய்வு எடுக்க வேண்டும் என யாரோ செய்திகளை பரப்பி விட்டார்கள். பிறகு பும்ரா வந்து இது போலியான செய்தி, இப்படியான செய்திகள் எளிதில் பரப்பி விடும் என விளக்கம் கொடுத்தார். அப்படியே அவர் ஏதும் சொல்லாமல் இருந்திருந்தால் அவை உண்மையாக இருக்கக்கூடும்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -