இந்திய கிரிக்கெட்

ரோஹித் இதை டீம்க்காக செய்யலாம்.. ஆனா அதுவே இந்திய அணிக்கு பிரச்சனையா மாறும் – ஆகாஷ் சோப்ரா கணிப்பு

சாம்பியன்ஸ் டிராபி தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் மோதி விளையாடின. இதில் சிறப்பாக விளையாடிய இந்திய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சிறப்பான வெற்றியை பதிவு செய்தது.

- Advertisement -

இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா குறித்து முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா சில முக்கியமான கருத்துக்களை பேசி இருக்கிறார்.

சாம்பியன்ஸ் டிராபி தொடர்

இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவை பொருத்தவரை ஆக்ரோஷமாக விளையாடும் பாணியை தொடர்ந்து பின்பற்றி வருகிறார். 2023ம் ஆண்டு நடைபெற்ற ஒரு நாள் உலகக் கோப்பை தொடரில் ஒவ்வொரு போட்டியிலும் அதிரடியான தொடக்கத்தை ஏற்படுத்திக் கொடுத்த ரோஹித் சர்மா இறுதிப்போட்டியில் 41 ரன்கள் குவித்து வெளியேறினார். ஆனால் அதற்கு பின்னால் வந்த வீரர்கள் அதனை சிறப்பாக பயன்படுத்திக் கொள்ளாததால் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணியிடம் இந்திய அணி தோல்வி அடைந்தது.

இருப்பினும் டி20 உலக கோப்பையிலும் இதே மாதிரியான ஆக்ரோசத்தை ரோகித் சர்மா கடைபிடித்து, இந்திய அணிக்கு கோப்பையை பெற்றுக் கொடுத்த நிலையில் தற்போது சாம்பியன்ஸ் டிராபி தொடரிலும் அதே மாதிரியான அணுகுமுறையை பின்பற்றி வருகிறார். இந்த சூழ்நிலையில் இந்திய முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா ரோஹித் சர்மா 100 ரன்கள் எடுக்க வேண்டிய இடத்தில் 41 ரன்கள் எடுத்துச் சென்றால் அது அணி சற்று பின்னடைவை சந்திக்கும் சில கருத்துக்களை பேசி இருக்கிறார்.

- Advertisement -

இது மகிழ்ச்சியாக இல்லை

இது குறித்து அவர் விரிவாக கூறும்போது “ரோகித் சர்மா விளையாடிய வரை அவர் சிறப்பாக விளையாடினார் என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும். இது ஒரு முறியடிக்கப்பட்ட சாதனையாக தோன்றலாம், ஆனால் ரோஹித் சர்மா மிக விரைவாக விளையாடிவிட்டு வெளியேறினால் அது அணியை சற்று பின் தள்ளிவிடும். 100 ரன்கள் பெற்ற ஒரு பேட்ஸ்மேனிடமிருந்து 40 ரன்கள் மட்டுமே பெற்று நாம் மகிழ்ச்சி அடைந்தால் அது பலன் அளிக்காது.

இதையும் படிங்க:இந்திய அணியிடம் தோல்வி.. பீட்டர்சன் சர்ச்சையான விமர்சனம்.. பயிற்சிகளை பார்த்தீர்களா.? இங்கி ஜோரூட் தரமான பதிலடி..

இருப்பினும் அடுத்த போட்டி பாகிஸ்தான் அணிக்கு எதிராக அவர் விளையாட உள்ள நிலையில் அதற்கு முந்தைய போட்டியில் சில ரன்கள் எடுத்திருக்கிறார். அக்சார் பட்டேல் இந்த போட்டியில் அற்புதமாக பந்து வீசினார், அவருக்கு நல்ல வாய்ப்பு அமைந்தது. இருப்பினும் ஒரு கேட்ச் தவற விடப்பட்டதால் அந்த வாய்ப்பை இழந்தார்” என்று ஆகாஷ் சோப்ரா கூறியிருக்கிறார். இந்திய அணி வருகிற ஞாயிற்றுக்கிழமை பாகிஸ்தான் அணிக்கு எதிராக இரண்டாவது போட்டியில் விளையாட இருப்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -
Published by

Recent Posts