இந்த குறை நிச்சயமா ரோஹித் அணியில் இருக்கு.. ஒத்துக்கிட்டே ஆகணும்.. இதான் எதார்த்தம் – ஆகாஷ் சோப்ரா கருத்து

0
78

இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் பிரிஸ்பேனில் உள்ள கபா மைதானத்தில் விளையாடி வருகிறது. இந்த சூழ்நிலையில் முதல் நாள் ஆட்டம் பெரும்பாலும் மழையால் பாதிக்கப்பட்டிருக்கிறது.

இந்த நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா இந்திய கிரிக்கெட் அணியின் பந்துவீச்சு குறித்து சில முக்கிய கருத்துகளை கூறியிருக்கிறார்.

- Advertisement -

இந்தியா ஆஸ்திரேலியா மூன்றாவது டெஸ்ட்

இந்த முறை ஆஸ்திரேலியாவுக்கு வந்திருக்கும் இந்திய கிரிக்கெட் அணி பந்துவீச்சை பொறுத்தவரை பும்ரா மற்றும் சிராஜையே அதிகமாக சார்ந்து இருக்கிறது. ஏனென்றால் இந்திய அணியின் மற்றொரு ஆஸ்தான பந்துவீச்சாளராக திகழும் முகமது ஷமி காயம் காரணமாக இந்த தொடரில் பங்கு பெறாத நிலையில், இந்திய அணி பந்துவீச்சில் பின்னடைவை சந்தித்து வருகிறது. மேலும் பேட்டிங்கிலும் இந்திய அணி சொதப்பி வரும் நிலையில் இந்த முறை பந்து வீச்சும் இந்திய அணிக்கு ஆபத்தாக உள்ளது.

இந்த சூழ்நிலையில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடிய ஹர்ஷித் ரானா இரண்டாவது போட்டியில் சிறப்பாக செயல்படத் தவறியதால் அவருக்கு பதிலாக மூன்றாவது டெஸ்ட் போட்டியில் ஆகாஷ் தீப் சேர்க்கப்பட்டிருக்கிறார். இருப்பினும் முகமது ஷமி இல்லாத குறை இந்திய அணிக்கு அப்பட்டமாக தெரியும் நிலையில் இதுகுறித்து முன்னாள் கிரிக்கெட் வீரரான ஆகாஷ் சோப்ரா இது குறித்து சில முக்கிய கருத்துக்களை கூறியிருக்கிறார்.

- Advertisement -

இந்திய அணியில் இதுதான் எதார்த்தம்

இது குறித்து அவர் விரிவாக கூறும்போது “இந்திய அணியில் தற்போது இதுதான் எதார்த்தம். இது உண்மையாக ஏற்றுக் கொள்வதற்கு கடினமாக உள்ளது. தற்போது இந்திய அணியில் பும்ரா மீது அதீத நம்பிக்கையில் இருப்பது உண்மைதான். பும்ரா மிகவும் நல்லவராக இருக்கிறார். திடீரென்று இந்திய அணி சற்று வித்தியாசமாக காட்சியளிக்கிறது. இரண்டாவதாக இந்திய அணிக்கு முகமது சிராஜ் இருக்கிறார்.

இதையும் படிங்க:ரோகித் சர்மாவுக்கு தனிப்பட்ட பயம்.. அதான் 3வது டெஸ்ட்ல இந்த முடிவு எடுத்தார் – கிளன் மெக்ராத் விமர்சனம்

ஆனால் ஒரு அணிக்கு குறைந்தபட்சம் மூன்று மும்முனை தாக்குதல் கொண்ட வேகப்பந்துவீச்சாளர்கள் தேவை. எங்களது மூன்றாவது முனை அவ்வளவு ஈர்க்கக் கூடியதாக இல்லை. முகமது சிராஜ் தற்போது நன்றாக செயல்பட்டு வருகிறார் என்று நினைக்கிறேன். இந்தத் தொடரில் அவர் ஒன்பது விக்கெட்டுகள் வீழ்த்தி இருக்கிறார். எனவே இந்திய அணிக்கு அவரால் முடிந்த பங்களிப்பை 100% வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார் என்று நினைக்கிறேன்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -