ரோகித் சர்மாவுக்கு தனிப்பட்ட பயம்.. அதான் 3வது டெஸ்ட்ல இந்த முடிவு எடுத்தார் – கிளன் மெக்ராத் விமர்சனம்

0
926

இந்திய கேப்டன் ரோகித் சர்மாவுக்கு முதலில் பேட்டிங் செய்ய விருப்பமில்லாத காரணத்தினால் தான் அவர் பந்துவீச்சை தேர்ந்தெடுத்தார் என கிளன் மெக்ராத் விமர்சனம் செய்திருக்கிறார்.

இன்று இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் மூன்றாவது போட்டி பிரிஸ்பேன் காபா மைதானத்தில் தொடங்கியது. ஆனால் அங்கு இடைவிடாது பெய்த மழையின் காரணமாக 13 ஓவர்கள் மட்டுமே வீசப்பட்டு முதல் நாள் போட்டி முடிவுக்கு வந்தது.

- Advertisement -

வித்தியாசமாக விமர்சிக்கும் ஆஸ்திரேலியா முன்னாள் வீரர்கள் 


குறிப்பிட்ட இந்த மைதானத்தில் இரண்டாவது பேட்டிங் செய்யும் அணிகளே அதிக வெற்றிகள் பெற்றிருக்கின்றன. இந்தியா கடைசியாக இந்த மைதானத்தில் பெற்ற வரலாற்று வெற்றியும் கூட இரண்டாவது பேட்டிங் செய்து தான் வந்தது என்பது குறிப்பிடத்தக்கது. புள்ளி விபரங்கள் இதையே அழுத்தமாக நிரூபிக்கின்றன.

மைதானத்தின் வெற்றி தோல்வி புள்ளி விபரங்கள் இப்படியாக இருக்க ரோகித் சர்மாவும் அதை பின்பற்றியே முதலில் பந்து வீசுவதாக அறிவித்தார். இருந்த போதிலும் ஆஸ்திரேலிய முன்னாள் வீரர்கள் ரோகித் சர்மா மிகப்பெரிய தவறு செய்து விட்டதாக தொடர்ந்து அவர் மீது விமர்சனத்தை வைத்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

ரோகித் சர்மாவுக்கு விருப்பமில்லை

இது குறித்து கிளன் மெக்ராத் கூறும்பொழுது ” ரோகித் சர்மா டாஸ் வென்று பந்துவீச்சை தேர்ந்தெடுத்ததில் எனக்கு எந்தவித ஆச்சரியமும் கிடையாது.ஏனென்றால் அவர் வெளியேறி வந்து பேட்டிங் செய்வதற்கு விரும்பவில்லை. நீங்கள் முதலில் பந்து வீசி அது சிறப்பாக அமையவில்லை எனும் பொழுது அது மீடியாக்களில் மோசமாக செல்லும். எனவே நீங்கள் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்யுங்கள். அது மோசமாக சென்றாலும் கூட அது துணிச்சலான முடிவாக பார்க்கப்படும்” என்று கூறி இருக்கிறார்.

இதையும் படிங்க : ஃபேர்வெல் டெஸ்ட்.. கெயில் பிரம்மாண்ட சாதனை சமன்.. டிம் சவுதி மாஸ் ரெக்கார்டு.. முடிவுக்கு வரும் சகாப்தம்

இதுகுறித்து மேத்யூ ஹைடன் கூறும் பொழுது “நான் ஆஸ்திரேலியா தொடரை வெல்லும் என்று உறுதியாக கூறுகிறேன். இன்று டாஸ் அவர்களுக்கு சாதகமாக சென்று இருப்பதால் நான் இந்த முடிவு செய்கிறேன். இந்திய கேப்டன் இன்று டாஸில் தவறான முடிவு செய்தார். இது சிறந்த பேட்டிங் விக்கெட். இங்கு முதல் மூன்று நாட்கள் பேட்டிங் செய்வதற்கு மிகச் சாதகமாக இருக்கும்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -