நான் கில்லை பத்தி அப்படி சொல்லவே இல்ல.. ஜிம்பாப்வே சீரிசையே அந்த காரணத்தால பாக்கல – ஆகாஷ் சோப்ரா மறுப்பு

0
37
Gill

நடந்து முடிந்த ஜிம்பாப்பை அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் எடுத்த சில முடிவுகள் சமூக வலைதளங்களில் பெரி யவிமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறது. இந்திய முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ராவை தொடர்பு படுத்திய ஒரு விஷயம் குறித்து அவர் தெளிவுபடுத்தி இருக்கிறார்.

முதல் இரண்டு போட்டிகளில் ஜெய்ஸ்வால் மற்றும் சஞ்சு சாம்சன் இல்லாத நிலையில் சுப்மன் கில் மற்றும் அபிஷேக் ஷர்மா இருவரும் துவக்க ஆட்டக்காரர்களாகக் களம் இறங்கினார்கள். இதில் இரண்டாவது போட்டியில் அபிஷேக் ஷர்மா அதிரடியாகச் சதம் அடித்தார். அதே சமயத்தில் மூன்றாவது போட்டியில் ஜெய்ஸ்வால் வர மூன்றாவது இடத்திற்கு அபிஷேக் சர்மா தள்ளப்பட்டார்.

- Advertisement -

மேலும் சுப்மன் கில் தன்னை மூன்றாவது இடத்திற்கு கீழே இறக்கிக் கொள்ளவில்லை. மேலும் சிறப்பாக விளையாடிய ருதுராஜை பேட்டிங்கில் நான்காவது இடத்திற்கு தள்ளினார். அவர் அந்த இடத்தில் வந்தும் மிகச் சிறப்பாக விளையாடி தன்னை நிரூபித்தார்.

எல்லாவற்றையும் விட ஜெய்ஸ்வால் நான்காவது டி20 போட்டியில் சதம் அடிப்பதற்கான அதிகபட்ச வாய்ப்பில் இருந்த பொழுது, திடீரென அதிரடியாக விளையாடி கேப்டன் கில் ஜெய்ஸ்வால் சதம் அடிக்கும் வாய்ப்பை தடுத்து விட்டார். இதுவெல்லாம் சேர்ந்து அவர் மீது பெரிய விமர்சனங்களை உருவாக்கியது.

- Advertisement -

இந்த நிலையில் இந்திய முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா பெயரில் வெளிவந்த ஒரு அறிக்கையில் ” அபிஷேக் சர்மா அதிரடி சதம் அடித்திருந்த பொழுதும், அவரை அடுத்த போட்டியில் துவக்க ஆட்டக்காரராக இன் செக்யூரிட்டி சுப்மன் கில் விடவில்லை. பராக் வெளியே அனுப்பப்பட்டார். வேகப்பந்துவீச்சாளர்களுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டது. ஆனால் கில் மட்டும் தொடர்ந்து ஐந்து போட்டிகளும் துவக்க வீரராக விளையாடினார். இதை பார்ப்பதற்கு பாபர் அசாம் செய்வது போலவே இருந்தது” என்று கூறப்பட்டிருந்தது.

இதையும் படிங்க : 2 நாளில் இந்தியா பாகிஸ்தான் போட்டி.. எந்த சேனலில் பார்க்கலாம்.?.. மகளிர் ஆசிய கோப்பை 2024 அட்டவணை

தற்போது இதற்கு மறுப்பு தெரிவித்து இருக்கும் ஆகாஷ் சோப்ரா கூறும் பொழுது ” என்னுடைய பெயரில் வந்த இந்த கருத்து நிறைய ஷேர் ஆகியிருக்கிறது. இது என்னுடைய ஸ்டேட்மென்ட் கிடையாது. நான் இப்படி கூறவே இல்லை. நான் வெக்கேஷன் சென்று இருந்த காரணத்தினால் இந்த தொடர் முழுக்கவே ஒரு போட்டி கூட பார்க்கவில்லை” என்று தெளிவுபடுத்தி இருக்கிறார்.

- Advertisement -