நடந்து முடிந்த ஐபிஎல் மெகா ஏலத்தில் ஆர்சிபி ஏலக்குழு தங்கள் அணிக்காக விளையாடிய வில் ஜேக்சை திருப்பி வாங்காமல் பெரிய தவறு செய்து விட்டதாக இந்திய முன்னாள் வீரர் முகமது கைஃப் விமர்சனம் செய்திருக்கிறார்.
இதற்கும் முந்தைய மெகா ஏலத்தில் 3.20 கோடி ரூபாய்க்கு வில் ஜேக்சை ஆர்சிபி அணி வாங்கியிருந்தது. ஆனால் அவருக்கு இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில்தான் விளையாடுவதற்கு வாய்ப்பு கொடுத்தது. அவர் ஒரு போட்டியை பந்துவீச்சாலும் ஒரு போட்டியை பேட்டிங்காலும் தனியாக வென்று கொடுத்திருந்தார். எட்டு போட்டிகளில் 175 ஸ்ட்ரைக் ரேட் உடன் ஒரு சதம் மற்றும் ஒரு அரை சதமுடன் 230 ரன்கள் குவித்திருந்தார்.
ஏலத்தில் நடந்த தவறு
இந்த நிலையில் நடந்து முடிந்த மெகா ஏலத்தில் ஆர்சிபி அணி தங்களுக்கு சரியான மூன்றாவது இடத்தில் பேட்டிங் செய்வதற்கான வீரர் அல்லாத பொழுதும் கூட வில் ஜேக்ஸ் ஏலத்திற்கு வந்த பொழுது வாங்குவதற்கு முயற்சி செய்யவில்லை. மேலும் மும்பை இந்தியன்ஸ் அணி 5.25 கோடி ரூபாய்க்கு வாங்கிய பொழுது ஆர்டிஎம் வாய்ப்பையும் பயன்படுத்தவில்லை. இதனால் குறைந்த விலைக்கு மும்பை இந்தியன்ஸ் அவரை வாங்கியது.
இதன் காரணமாக ஏலத்தில் இருந்து எழுந்து வந்து ஆகாஷ் அம்பானி ஆர் சி பி உரிமையாளருக்கு நன்றி தெரிவித்துவிட்டு சென்றார். பந்து வீச்சாளர்களை வாங்குவதில் ஓரளவுக்கு சரியாக செயல்பட்டு வந்த ஆர்சிபி இறுதியாக வில் ஜேக்ஸ் விசயத்தில் தங்கள் ரசிகர்களை ஏமாற்றி பெரிய விமர்சனங்களை சந்தித்து வருகிறது.
நல்ல வீரர்களை வாங்க விருப்பமில்லை
இது குறித்து முகமது கைஃப் கூறும் பொழுது “வில் ஜேக்ஸ் கடந்த ஆண்டு ஆர்சிபி மரியாதையை காப்பாற்றினார். ஆர்சிபி புள்ளி பட்டியலில் முதல் நான்கு இடங்களில் வந்தது.எனக்கு இரண்டு போட்டிகள் நினைவில் இருக்கிறது ஒன்றில் பந்து வீச்சில் ஐதராபாத் அணிக்கு எதிராக வெற்றி பெற்று கொடுத்தார். இன்னொன்றில் பேட்டிங்கில் குஜராத் அணிக்கு எதிராக சதம் அடித்து வெற்றி பெற்று கொடுத்தார். இரண்டு போட்டிகளை தனியாக வென்ற வீரரை அணியில் எடுக்கவில்லை”
இதையும் படிங்க : ஆர்சிபி வாங்கிய நேரம்.. 15 பந்தில் லிவிங்ஸ்டன் ருத்ர தாண்டவம்.. 333.33 ஸ்ட்ரைக் ரேட்.. அபுதாபி டி10 லீக்
“ஆர்சிபி தங்களுக்கு நல்ல வீரர்கள் வேண்டாம் என கூறுகிறது. ரிஷப் பண்ட் மற்றும் கேஎல்.ராகுல் போன்ற நல்ல வீரர்களையும் வாங்குவதற்கு முன் வரவில்லை. வில் ஜேக்ஸ் சதம் அடித்தும் கூட அவரை வாங்க வரவில்லை. சதம் அடிப்பது அவ்வளவு எளிதான விஷயம் கிடையாது. ஏலத்தின் முதல் நாளில் ஆர்சிபி-யின் ஏலத்திட்டம் மோசமாக இருந்ததை பார்த்தோம். இரண்டாவது நாளிலும் அப்படியே இருக்கிறது. அவர்கள் வில் ஜாக்ஸை எடுக்காமல் பெரிய தவறு செய்து விட்டார்கள்” என்று கூறி இருக்கிறார்.






