வருண் சக்கரவர்த்தி ரஷித் கானை விட பெஸ்ட்.. அதற்கான காரணம் இதுதான் – ஆகாஷ் சோப்ரா விளக்கம்

0
71
Aakash

தற்போது இந்திய அணியில் மீண்டும் இடம்பிடித்து சிறப்பாக செயல்பட்டு வரும் வருண் சக்கரவர்த்தி குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா பாராட்டி பேசி இருக்கிறார்.

நவீன டி20 கிரிக்கெட் காலத்தில் இந்த வடிவத்தில் மிகச் சிறந்த சுழல் பந்துவீச்சாளராக ரசித் கான் இருந்து வருகிறார். ஆனால் அவரை விடவும் மிகவும் சிறப்பான ஒரு முறையில் வருண் சக்கரவர்த்தி இருப்பதாக ஆகாஷ் சோப்ரா கூறி இருக்கிறார்.

- Advertisement -

வருண் சக்கரவர்த்தி ரசித் கான் இல்லை

இது குறித்து ஆகாஷ் சோப்ரா பேசும் பொழுது “வருண் சக்கரவர்த்தி திரும்ப வந்ததில் இருந்து பவர் பிளேவில் பந்து வீச ஆரம்பித்து விட்டார். அவர் ஆறாவது ஓவரை வீசினார். அவருடைய பந்துவீச்சு அற்புதமானதாக இருந்தது. எனக்கு அவரிடம் பிடித்த விஷயம் என்னவென்றால் அவர் பந்தை காற்றில் மெதுவாக பிளைட் செய்து வீசுவதுதான்”

“இப்பொழுதெல்லாம் ஸ்பின்னர்கள் அடிபட்டவுடன் பந்தை வேகமாகவும், வேகப்பந்துவீச்சாளர்கள் பந்தை மெதுவாகவும் பேச ஆரம்பித்து விடுகிறார்கள். ரசித் கான் அடிபட்டால் உடனடியாக பந்தை வேகமாக வீச ஆரம்பிப்பார். ஆனால் ஒரு ஸ்பின்னராக வருண் சக்கரவர்த்தி இவ்வாறு செய்வது கிடையாது. அவர் தொடர்ந்து பந்தைக் காற்றில் மெதுவாக வீசுகிறார்”

- Advertisement -

வருண் செய்த முக்கிய மாற்றம்

“முன்பு வருண் சக்கரவர்த்தி கூக்ளி வீசுவதற்கு பந்தை வேகமாக வீசினார். லெக்பிரேக் வீச வேண்டுமென்றால் பந்தை கொஞ்சம் மெதுவாக வீசினார். இப்பொழுது இரண்டுக்குமே பந்தை அவர் மெதுவாகவே வீசுகிறார். முன்பு அவருடைய வேகத்தை வைத்து வேரியேஷனை கண்டுபிடித்தார்கள். இப்பொழுது அப்படி கண்டுபிடிக்க முடிவதில்லை”

இதையும் படிங்க : நேற்று கேப்டன் சூர்யா அதை செஞ்சப்ப.. ஆஹானு வாய் திறந்து பாராட்டினேன் – பசித் அலி புகழ்ச்சி

“இவரும் ஷார்ட்டாகவோ அல்லது ஃபுல்லாகவோ மோசமான பந்துகளை வீசிக்கொண்டுதான் இருந்தார். ஆனால் தற்போது இவரிடம் இருந்து இப்படியான மோசமான பந்துகள் அரிதாகவே கையில் இருந்து வருகிறது. பொதுவாக இவர் தற்பொழுது லைன் அண்ட் லென்த்தில் சீராக வீச ஆரம்பித்திருக்கிறார். முன்பு இருந்ததைவிட தற்பொழுது மிகவும் சிறப்பான நிலைக்கு வந்திருக்கிறார்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -