இந்தியா இங்கிலாந்து பணிகளுக்கு இடையே ராஞ்சி மைதானத்தில் நான்காவது டெஸ்ட் போட்டி நடக்க இருக்கின்ற நிலையில், இப்படி ஒரு ஆடுகளத்தை தன் வாழ்நாளில் பார்த்ததில்லை என இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டாக்ஸ் கூறியிருக்கிறார்.
நேற்று இங்கிலாந்து அணியின் துணை கேப்டன் ஒல்லி போப் பேசும்பொழுது, இங்கிலாந்து தன்னுடைய டெஸ்ட் கிரிக்கெட் அணுகுமுறையை மாற்றிக் கொள்ளாது எனவும், தொடர்ந்து வழக்கமான முறையிலேயே விளையாடும் எனக் கூறியிருந்தார்.
மேலும் அவர் கூறும் பொழுது, ஆடுகளம் சுழல் பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும் என்பது போல் தெரிகிறது, இதன் காரணமாக இந்திய அணி முகமது சிராஜை மட்டும் வைத்துக்கொண்டு, இரண்டாவது வேகப்பந்துவீச்சாளருக்கான இடத்தில் அக்சர் படேலை விளையாடும் என எதிர்பார்ப்பதாகவும் கூறியிருந்தார்.
மேலும் இந்திய அணியில் நான்காவது டெத்தில் இருந்து உடல் தகுதி பெறாத காரணத்தினால் கே.எல்.ராகுல் மீண்டும் ரூல்டு அவுட் செய்யப்பட்டு இருக்கிறார். இந்தத் தொடரில் கிடைத்த இரண்டு வாய்ப்பில் இன்னும் 50 ரன் கூட எடுக்காத ரஜத் பட்டிதாருக்கு இன்னும் ஒரு வாய்ப்பு தரப்படுமா? இல்லை தேவ்தத் படிக்கல் அறிமுக வாய்ப்பை பெறுவாரா? என்பது கேள்வியாக இருக்கிறது.
நான்காவது டெஸ்ட் போட்டியை மையமாக வைத்து இந்திய அணியைச் சுற்றி இப்படியான நிறைய சுவாரசிய எதிர்பார்ப்புகள் கூடியிருக்கிறது. இதற்கு என்ன மாதிரியான முடிவுகளை இந்திய கிரிக்கெட் நிர்வாகம்? வைத்திருக்கிறது என்று யாருக்கும் தெரியாது. மேலும் இரண்டாவது வேகப்பந்துவீச்சாளருக்கான இடத்தில் முகேஷ் குமார் மற்றும் புதிய வீரர் ஆகாஷ் தீப் இருவரும் இருக்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா கூறும் பொழுது ” கேஎல்.ராகுல் மூன்றாவது போட்டியில் இருந்து இந்திய அணிக்கு கிடைப்பார் என்று கூறப்பட்டது. ஆனால் அவர் தற்போது நான்காவது போட்டிக்கு கிடைக்கவில்லை. மேலும் ஐந்தாவது போட்டிக்கு கிடைப்பாரா? என்றும் தெரியாது. ஆரம்பத்தில் சிறிய காயம் போல் தெரிந்தது ஆனால் தற்போது பெரிய காயமாக இருக்கும் போல.
மேலும் இந்திய அணியில் பேட்டிங் யூனிட்டில் பெரிய மாற்றங்கள் எதுவுமே செய்ய மாட்டார்கள் என்று நினைக்கிறேன். இதன் காரணமாக ரஜத் பட்டிதாருக்கு கோல்டன் சான்ஸ் கிடைத்திருக்கிறது. எனவே பெரிய அளவில் ரன்கள் குவித்து அதை அவர் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
இதையும் படிங்க : வெளியானது 2024 ஐபிஎல் அட்டவணை.. பிசிசிஐ வைத்த முக்கியமான ட்விஸ்ட்.. முதல் போட்டியில் சிஎஸ்கே ஆர்சிபி
இரண்டாவது வேகப்பந்துவீச்சாளருக்கான இடத்தில் முகேஷ் குமார் ஆகாஷ் தீப் யார் இருந்தாலுமே, ராஞ்சி ஆடுகளத்தில் வேகப்பந்து வீச்சு எடுபடாது என்பதால், ரவீந்திர ஜடேஜா ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் குல்தீப் யாதவ் இவர்களுடன், நான்காவது சுழற் பந்துவீச்சாளராக அக்சர் படேலை எடுத்துச் செல்வது சரியானதாக இருக்கும்” எனக் கூறியிருக்கிறார்.