தற்போது 40 வயதை கடந்துள்ள மகேந்திர சிங் தோனிக்கு ஐபிஎல் தொடரில் விளையாடுவது மிகவும் சிரமமான விஷயம் என ஆகாஷ் சோப்ரா கூறியிருக்கிறார்.
மேலும் தோனிக்கு அடுத்து விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா இருவருக்கும் ஐபிஎல் தொடரில் தொடர்ந்து விளையாடுவது சிரமமான விஷயமாக இருக்கப் போகிறது என்றும் அவர் கூறியிருக்கிறார்.
அதிகரிக்கும் விமர்சனங்கள்
தோனி தற்போது விக்கெட் கீப்பிங் இல் சுழல் பந்துவீச்சாளர்களுக்கு எதிராக சிறப்பான முறையில் செயல்பட்டு விட முடியும். ஆனால் வேகப் பந்துவீச்சாளர்களுக்கு எதிராக வேகமாக செயல்படுவதற்கான உடல் தகுதி அவருக்கு குறைவாகவே உள்ளது. இத்துடன் அவர் சுழல் பகுதிக்கு எதிராக தடுமாற்றமாக பேட்டிங் செய்கிறார். மேலும் கடைசி மூன்று ஓவர்கள் மட்டுமே பேட்டிங் செய்ய வர விரும்புகிறார்.
இதன் காரணமாக அவர் சிஎஸ்கே அணிக்கு தற்போது ஒரு சுமையாக மாறிவிட்டார் என்று கிரிக்கெட் வல்லுனர்கள் கொஞ்சம் கொஞ்சமாக பேச ஆரம்பித்திருக்கிறார்கள். இந்த நிலையில் அவர் எந்த வருடத்துடன் ஓய்வு பெறுவது நல்லது என்றும் கூறுகிறார்கள்.
தோனிக்கு சிரமமாக இருக்கும்
இதுகுறித்து ஆகாஷ் சோப்ரா பேசும் பொழுது ” தோனி வருடத்தில் 10 மாதங்கள் கிரிக்கெட் விளையாடாமல் இருந்து, மேலும் 40 வயது தாண்டி உடனுக்குடனே ஐபிஎல் தொடருக்கு வந்து தன்னை தயார் செய்து கொள்வது மிகவும் கடினம். அவர் கடைசி மூன்று ஓவர்களை சந்தித்து விளையாடுகின்ற இடம் மிக முக்கியமானது. இதற்கு அடுத்து அவர் 20 ஓவர்கள் விக்கெட் கீப்பிங் செய்வது என்பது மிகவும் சிரமமான விஷயம்”
இதையும் படிங்க : ஒரு போட்டியில் 300 ரன் எடுக்க.. நான் மேத்யூ ஹைடன் கிட்ட ஒரு முக்கிய விஷயம் பேசி இருக்கேன் – சாய் சுதர்சன் பேட்டி
“இதற்கு அடுத்து விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா இருவரும் வருகிறார்கள். அதிக காலம் விளையாடுவது விராட் கோலிக்கு ஓரளவு சுலபமான விஷயமாக இருக்கலாம். ஏனென்றால் அவர் உடல் தகுதியில் எல்லோருக்கும் முன்னுதாரணமாக இருக்கிறார். ஆனால் ரோகித் சர்மாவுக்கு இது கடினமாக இருக்கும். ஆனால் இருவருமே துவக்க ஆட்டக்காரர்கள் என்பதால் தோனியின் வயதில் விளையாட முடியாது” என்று கூறியிருக்கிறார்.






