ஐபிஎல் 2024

பாவம் மும்பை அணி.. பும்ரா இல்லனா.. வில் ஜாக்ஸ் கண்டிப்பா விளையாட மாட்டார்.. இதான் காரணம் – ஆகாஷ் சோப்ரா

18வது ஐபிஎல் சீசன் கிரிக்கெட் தொடர் இன்னும் சில தினங்களில் நடைபெற உள்ள நிலையில் கோப்பையை வெல்லக்கூடிய அணிகளில் ஒன்றாக மும்பை இந்தியன்ஸ் அணி வலுவாக களம் இறங்குகிறது.

- Advertisement -

இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா மும்பை இந்தியன்ஸ் அணி குறித்து சில முக்கிய விஷயங்கள் பேசி இருக்கிறார்.

காயம் அடைந்த பும்ரா

மும்பை இந்தியன்ஸ் அணியை பொறுத்தவரை ஐபிஎல் மெகா ஏலத்திற்கு முன்பாக 5 இந்திய வீரர்களை தக்க வைத்தே மிக வலிமையான அணியாக மாறியது. ரோஹித் சர்மா, சூரியகுமார் யாதவ், திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா, ஜஸ்பிரித் பும்ரா என்று ஐந்து சாம்பியன் வீரர்களை தக்க வைத்தே மிக வலிமையான அணியாக மாறியது. எனவே மீதமுள்ள இடங்களை நிரப்புவதற்கு மட்டுமே இந்த மெகா ஏலத்தில் கலந்து கொண்டதும் குறிப்பிடத்தக்கது.

இந்த சூழ்நிலையில் தங்களுக்கு தேவையான வீரர்களை ஏலத்தில் எடுத்து அணியை வலுவாக கட்டமைத்துள்ளது. இதில் எதிர்பாராத விதமாக இந்திய அணியின் நட்சத்திர பவுலர் பும்ரா காயம் அடைந்து வெளியேறிய நிலையில் அவரால் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாட முடியவில்லை. இருப்பினும் அவர் ஐபிஎல் தொடரிலும் மும்பை அணிக்கு ஏப்ரல் முதல் வாரம் வரை கிடைக்க மாட்டார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. இந்த சூழ்நிலையில் மும்பை அணி இப்போது சிக்கலில் மாட்டும் என்று ஆகாஷ் சோப்ரா கூறி இருக்கிறார்.

- Advertisement -

வில்ஜாக்ஸ் ஆடுவது சந்தேகம்

இதுகுறித்து அவர் கூறும் போது “மும்பை அணிக்கு ஏதாவது கவலை இருக்கிறதா? என்று கேட்டால், பும்ரா காயம் அடைந்து வெளியேறி இருப்பது தான். அவர் கிடைக்கவில்லை என்றால் அவருக்கு பதிலாக மாற்று வீரராக யாரையும் தேர்வு செய்ய முடியாது. அவருக்கு பதிலாக யார் இருந்தாலும் அது நிச்சயம் வேலை செய்யப் போவதில்லை. எனவே பும்ராவுக்கு பதிலாக மாற்று வீரர் ஒருவரை கண்டுபிடிப்பது சாத்தியமில்லை. எனவே இது பெரிய கலவைக்கு மாற்றாக இருக்கலாம்.

இதையும் படிங்க:இனி விராட் கோலியை நம்ப வேண்டாம்.. ஐபிஎல் ஏலத்தில் அப்பவே இதை முடிவு செஞ்சோம் – தினேஷ் கார்த்திக் பேட்டி

பும்ரா கிடைக்கவில்லை என்றால், ரீஸ் டாப்லீ அல்லது கார்பின் போஸ் இந்த இருவரில் யாராவது ஒருவர் விளையாடுவார்கள். நீங்கள் அப்படி செய்தால் ரிக்கல்ட்டன் அல்லது வில் ஜாக்ஸை நீக்கிவிட்டு ராபின் மின்சை நடுவில் சேர்க்க வேண்டும். ஒரு இந்திய வீரர் வெளியேறுகிறார் என்றால் அவருக்கு பதிலாக இரண்டு மாற்றங்கள் செய்ய வேண்டியது அவசியம் ஆகிறது” என்று ஆகாஷ் சோப்ரா பேசியிருக்கிறார்.

- Advertisement -
Published by

Recent Posts